சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர்களை கொல்லும் தம்பதி போலீசார் எச்சரிக்கை 'நோட்டீஸ்'

Added : செப் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 முதியவர்களை கொல்லும் தம்பதி  போலீசார் எச்சரிக்கை 'நோட்டீஸ்'

சென்னை : 'வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து தனியாக வசிக்கும் முதியவர்களை கொன்று கொள்ளையடிக்கும் ஆந்திர தம்பதி குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்' என போலீசார் அறிவித்துள்ளனர்.

ஆவடி அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் 65 இவரது மனைவி விலாசினி 58. இருவரும் அரசு அச்சக துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் அதே பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.கடந்த 2018 நவ. 27ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். நகை பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் 28 இவரது மனைவி பூவலட்சுமி 22 ஆகியோர் 3 வயது மகனுடன் தலைமறைவாகினர்.

போலீசாரின் விசாரணையில் இவர்கள் வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து தனியாக வசிக்கும் முதியோரை கொன்று கொள்ளையடிப்பவர்கள் என தெரிய வந்தது.மேலும் இவர்கள் மீது ஆந்திராவில் திருட்டு மற்றும் கொலை தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அம்மாநில போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.சம்பவத்தன்று இருவரும் மகனுடன் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா விரைவு ரயிலில் ஆந்திராவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஆவடி போலீசார் தனிப்படைகள் அமைத்து ஆந்திராவில் முகாமிட்டு சுரேஷ் மற்றும் பூவலட்சுமி ஆகியோரை தேடினர். இவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கூட கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர்.சுரேஷ் மற்றும் பூவலட்சுமி ஆகியோரின் படத்துடன் எச்சரிக்கை 'நோட்டீஸ்' அச்சடித்து வழங்கி வருகின்றனர். அதில் 'படத்தில் இருப்பவர்கள் வீடு வாடகைக்கு கேட்பது போல வருவர்; எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் 94448 03562 மற்றும் 94981 06608 அவசர போலீஸ் எண்: 100க்கு தகவல் தெரிவிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
12-செப்-201910:01:36 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy They should inform the police of Andhra, Odisha, maharhtra and West Bengal also.
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
12-செப்-201902:40:35 IST Report Abuse
Rajesh பிடிபட்டவுடன் முதல்ல விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க.... சமூகத்திற்கு பிடித்த புற்று கொஞ்சம் கொஞ்சமா தீரும்........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X