அரசியல் செய்தி

தமிழ்நாடு

4ம் கட்ட போராட்டம் காங்., அறிவிப்பு

Added : செப் 12, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை : ''முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் கைதை கண்டித்து, வரும், 16ம் தேதி, நான்காம் கட்ட போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:தற்போது, மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. அதேபோல், வங்கிகளில், படித்த இளைஞர்களுக்கு, தொழில் கடன்கள் கிடைப்பதில்லை. சிதம்பரம் கைதை எதிர்த்து, தமிழக காங்., நடத்திய போராட்டம் குறித்து, கார்த்தி சிதம்பரம் என்ன கூறினார் என, எனக்கு தெரியாது. வன்முறை, மறியல், கடையடைப்பு, பஸ் கண்ணாடியை உடைப்பது போன்ற போராட்டங்களை, காங்., விரும்புவது இல்லை.அதற்கு பதிலாக, ஜனநாயக ரீதியாக, கருத்துக்களை கூறி வருகிறோம். முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் கைதில், அரசியல் இருப்பது, நாடு முழுவதற்கும் தெரியும். கைதை கண்டித்து, இதுவரை, மூன்று கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இதைத் தொடர்ந்து, வரும், 16ம் தேதி நான்காம் கட்ட போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-201906:58:20 IST Report Abuse
Sriram V Are you not ashamed that you are supporting corrupt leaders? Yes your party instruction is to support corruption
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
12-செப்-201915:05:06 IST Report Abuse
s.rajagopalan சிதம்பரம் கைதில் அரசியல் இருக்கிறது என்று நாடு முழுவதும் தெரியுமாம் நாடு என்று இவரை குறிக்கிறாரோ ? மாறாக சிதம்பரமும் கார்த்தியும் பணம் சுருட்டியிருக்கிறார்கள் என்று நிச்சயமாக மக்கள் நம்புகிறார்கள் , வெளிப்படையாக பேசுகிறார்கள். ஒரு யோசனை. போராட்டம் உண்ணா விரதமா இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் ஒரு வாரம் பத்திரிகையில் இடம் பிடிக்க அழகிரி என்னமாய் அலைகிறார் யாரும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே ?
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-செப்-201910:01:29 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan எத்தனை போராட்டம் நடத்தினாலும் சிதம்பரம் விடுதலை இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X