காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு; ஐ.நா., தலைவர் விருப்பம்

Updated : செப் 13, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (2+ 4)
Advertisement
antonio guterres,Kashmir,U.N,United Nations,ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை,காஷ்மீர்

நியூயார்க்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் 5ல், ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை, பாக்., நாடியது. இது முழுக்க முழுக்க, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில், மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய நாடான பிரான்சில் நடைபெற்ற, ஜி - 7 மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியுடன், ஐ.நா., தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் பேசினார். பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷாமெஹ்மூத் குரேஷியுடனும்அவர் பேச்சு நடத்தினார். மேலும், பாக்.,கிற்கான ஐ.நா., நிரந்தர பிரதிநிதி, மலீஹா லோதியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அவருடனும் கட்டெரஸ் பேசினார்.

இந்நிலையில், இம்மாத இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாக்., பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் பேச்சு நடத்துவார் என, எதிர்பார்க்கப் பட்டது.

இந்நிலையில், ஆன்டனியோ கட்டெரசின் செய்தி தொடர்பாளர், ஸ்டெபானே டுஜரிக், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா - பாக்., இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில், ஐ.நா.,வின் நிலையில், எப்போதும் மாற்றமில்லை. இருநாடுகளும், இதை பேச்சு மூலம் தீர்த்துக் கொள்வதே ஒரே வழி. இவ்வாறு, அவர் கூறினார்.


இம்ரான்கான் பொதுக்கூட்டம்!

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபராபாதில் நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்போவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில் ''ஜம்மு - காஷ்மீர் பகுதியை இந்திய படைகள் முழுவதுமாக முற்றுகையிட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு பாக். எப்போதும் ஆதரவாக செயல்படும் என்பதை இந்த உலகுக்கு உணர்த்த முசாபராபாதில் நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
12-செப்-201909:57:52 IST Report Abuse
Appan இப்போ உள்ள நிலையில் பாகிஸ்தானை எந்த நாடும் நம்புவதில்லை.. அமெரிக்க ,ஒபாமா ஆட்சியில் இருந்த பாதுகாப்பு செயலர் சொல்கிறார். ' உலகில் பயங்கரமான நாடு பாகிஸ்தான் என்கிறார்,அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு மக்களின் மேல் அக்கறை இல்லை..பாக்கிஸ்த்தான் ஒசாமா பின் லேடனை ஒரு ஆர்மி பரேக்ஸ் ஊரில் வைத்து , அவன் அங்கு இருப்பது தெரியாது என்றார்கள்..இது எப்படி முடியும் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.. அதனால் உலக நாடுகள் எல்லோரும் பாகிஸ்தானை நம்ப மாட்டேன் என்கிறார்கள்..அங்குள்ள ஊடகங்களும் இதை சொல்கிறது..உலக தீவிரவாதங்களின் தொடங்கும் இடம் பாகிஸ்தானாக உள்ளது..எங்கு தீவிரவாதம் நடந்தாலும் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது..ஏனென்றால் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜியா ஆட்சியில் , பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் இயங்க ஆதரித்தார்கள்.விளைவு உலகம் இப்போ பாகிஸ்தானை தீவிரவாத நடக்க பார்க்கிறது..ஆப்கானிஸ்தானின் இப்போதைய நிலைக்கு பாகிஸ்தான் தான் கரணம்..அதனால் அமெரிக்க பாகிஸ்தான் மேல் கோபமாக உள்ளது..டிரம்ப் பாகிஸ்தானை முடக்குவார்..அப்போ தான் தலிபான்கள் அழிவார்கள்..இந்தியா சும்மா இருந்தாலே போதும்..ஏதும் பண்ண தேவை இல்லை..
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
12-செப்-201904:36:15 IST Report Abuse
blocked user ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து பாக்கிகள் வெளியேறவேண்டும். சீனா அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இல்லை என்றால் இந்தியா பாக்கிகளை அடித்து விரட்டவேண்டும். வேறு வழியில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X