பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து விதிமீறல் அபராதம்; கர்நாடகாவிலும் குறைகிறது

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (21)
Advertisement

பெங்களூரு: புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை அதிகமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கருதுவதால், அதை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென, முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.






போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை உயர்த்தி, மத்திய அரசு, சமீபத்தில், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. நாடு முழுவதும் 1ம் தேதி முதல், அமலுக்கு வந்தது. கர்நாடகத்தில், 4ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, அன்றே அமலுக்கு வந்தது. புதிய சட்டத்தால், வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமீறலை குறைத்துக் கொண்டனர்.

வாகன காப்பீடு இல்லாதவர்கள், காப்பீடு நிறுவனங்களுக்கு முன் குவிந்தனர். வாகனத்துக்கான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதற்கும் பெட்ரோல் பங்க் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பெரும்பாலான விதிமீறல்கள் குறைந்துள்ளன. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போக்குவரத்து போலீசார், ஆங்காங்கே, வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.





பெங்களூரில் மட்டும், 10ம் தேதி இரவு 10:00 மணி வரை, 10 ஆயிரத்து, 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு, 42 லட்சத்து, 53 ஆயிரத்து, 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டம் அமலுக்கு வந்தது குறித்து, பலருக்கு இதுவரை தெரியவில்லை. இதனால் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி, அபராதம் செலுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுடன் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

பின், முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டி: போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம், அபராத தொகை அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது. குஜராத் போன்று கர்நாடகாவிலும் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முதல்வரின் அறிவிப்பால், வாகன ஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், எப்போது அமல்படுத்துவர் என்று எதிர்பார்க்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-201913:45:25 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் புதிய சட்டத்தை நீர்த்து போக நடக்கும் முயற்சிகள் , அபராதம் குறைப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
12-செப்-201911:42:19 IST Report Abuse
narayanan iyer இந்த புதிய போக்குவரத்து சட்டம் ,சிந்தனை இல்லாமல் இயற்றிய சட்டம் . மக்களுக்கு பயன்தராத சட்டம் தேவை இல்லை . தூக்கி எறியப்படவேண்டும் .அப்படி பணம் கட்ட முடியாதவர்களின் வண்டிகளை பிடிக்கும் போலீஸ்காரர்கள் வண்டிகளை நீதிமன்றம் முன் நிறுத்திவிடுங்கள்.வேறு எங்கு இடம் இருக்கு ? வண்டி விலையைவிட அபராதம் இருந்தால் என்ன செய்வது பட்டிக்காட்டான் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
shankar - Krishnagiri,இந்தியா
12-செப்-201910:52:03 IST Report Abuse
shankar இன்னும் கூட அதிகம் அபராதம் போடட்டும் அனால் சாலை சரியில்லை என்றால் யாரிடம் வசூல் செய்வது, வசூலிக்கப்படும் அபராத தொகை மக்களிடம் பகிர்ந்தளிக்க படுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X