மத்திய அரசு மீது சோனியா தாக்கு

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (14)
Advertisement
காங்கிரஸ், நிர்வாகிகள், சோனியா



புதுடில்லி: காங். இடைக்கால தலைவர் சோனியா இன்று(செப்., 12) மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காங்.தலைவராக இருந்த ராகுல், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். புதிய தலைவர் இன்னும் நியமிக்கப்படாததால், சோனியா இடைக்கால தலைவராக உள்ளார். இந்நிலையில் இன்று காங். ஆலோசனை கூட்டம் சோனியா தலைமையில் டில்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த நிர்வாகிகள் குலாம் நபி ஆசாத், ஏகே அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநில காங் பொதுச்செயலர்கள், மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கோலகலமாக கொண்டாடுவது, நாடு முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.




இந்த கூட்டத்தில் சோனியா பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. இழப்புகள் அதிகரிக்கின்றன. இதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, மத்திய அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஜனநாயகம் தடம்புரண்டுள்ளது. மக்களின் உத்தரவு தவறாக பயன்படுத்துவதுடன், ஆபத்தான வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. மஹாத்மா காந்தி, படேல், அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-செப்-201914:07:07 IST Report Abuse
ஆரூர் ரங் சுடலையையும் சேர்த்து கூட்டுதலைமையிடம் கட்சியை ஒப்படைத்துவிடுங்கள். ஒரே நேரத்தில் இரு கட்சிகளுக்கும் ஒரே தலைவர் உலக சாதனையாயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201913:34:48 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ரோஹன் இன்னும் சில ஆண்டுகளில் தலைவர் பதவி ஏற்பார், அதுவரை தற்காலிக தலைவர் தொடருவார். போலி காந்தி பெயர் வைத்திருப்பவர் மட்டுமே தலைமை தங்க முடியும் ( அப்ப திருமுருகன் காந்தியை ஆக்கிவிடலாமா என்று கேட்கக்கூடாது )
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
12-செப்-201913:34:03 IST Report Abuse
Anand மன்மோகன் சிங், சோனியா/ரவுல் வின்சி, அந்தோணி, குலாம்நபி ஆசாத் - இதில் எவராவது இந்திய உணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்களா? இவனுங்க சுகபோகமாக வயிற்றை கழுவி வாழ்வது இந்திய மண்ணில், மாறாக இவனுங்க கொள்கையும், பேசுவதும், நடந்துக்கொள்வதும் ஹிந்துமதத்தை, இந்துக்களை, இந்தியாவை கேவலப்படுத்திதான், ஆனால் மதசார்பற்ற கட்சியாம், இப்படி கூறிக்கொள்ள வெட்கமாக இல்லையா பூமிக்கு பாரமாக இருக்கும் இந்த கொள்ளைக்கூட்டத்திற்கு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X