பொது செய்தி

தமிழ்நாடு

'ஒரே நாடு; ஒரே ரேஷன்' தமிழகம் இன்று முடிவு?

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (27)
Advertisement
'ஒரே நாடு; ஒரே ரேஷன்':இன்று முடிவு?

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் தொடர்பாக, அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், சென்னையில், உணவு துறை உயரதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த 29உள்ளனர்.

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே, உணவு வழங்கல் துறை சார்பில், ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. பயனாளிகள், அந்த கார்டை, ரேஷன் கடைகளில் காட்டி, மாதம்தோறும், அரிசி, கோதுமையை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை, மானிய விலையிலும் பெறலாம்.மத்திய அரசு, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.





இத்திட்டத்தின் கீழ், நாட்டில், எந்த மாநிலத்தில் வசிப்பவரும், எந்த ரேஷன் கடைகளிலும், பொருட்களை வாங்கலாம். இத்திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த இருப்பதாக, கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு, உணவு துறை அமைச்சர், காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதற்கு, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.அதேசமயம், 'இலவச அரிசி உள்ளிட்ட, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பொது வினியோக திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும்' என, தமிழக அமைச்சர்கள், விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, சேப்பாக்கத்தில், உணவு துறை சார்பில், மாவட்ட வழங்கல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், இன்று நடக்கிறது. அதில், கூட்டுறவு மற்றும் உணவு துறை, உணவு வழங்கல் துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்று, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக முடிவெடுக்க உள்ளனர். - நமது நிருபர் -'


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-201914:02:11 IST Report Abuse
ஆப்பு படத்துல கார்டு பாக்க சும்மா பாஸ்போர்ட் மாதிரி ஜொலிக்குது. அப்பிடியே பாஸ்போர்டுடன் இணைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களும் அங்கேயே ரேஷன் பொருள்கள் வாங்க வழி செய்யுங்க ஐயா...
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201913:31:28 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒரே ஊரில் வேறு பகுதிக்கு மாறிப்போனால் கூட பொருட்கள் வாங்க பழைய கடைக்கு ஓடவேண்டும், அல்லது செலவு செய்து, நடையாய் நடந்து முகவரி மாற்ற வேண்டும். இனி அந்த தொல்லை இல்லை. எங்கு மாறி சென்றாலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201912:58:02 IST Report Abuse
சிவன் தமிழ்நாடு ஒரே நாடு ஒரே மண் என்று சொல்லி மண்னை மாற்றுங்கள்..அப்புறம் ஒரே நாடு ஒரே ஆடை ஒரே நாடு ஒரே சோறு ஒரே நாடு ஒரே மொழி ஒரே நாடு ஒரே மொழி.. ஒரே நாடு ஒரே கடவுள்..ராமரை மட்டும் வச்சுட்டு..சிவன் விநாயகர் முருகர் எல்லாம் டிலீட் பண்ணீருங்கோ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X