பொது செய்தி

இந்தியா

லேண்டருக்கு 'ஹலோ' மெசேஜ் அனுப்பிய நாசா

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி : நிலவின் மேற்பரப்பில் சாப்ட் லேண்டிங் தொழில்நுட்ப முறையில் தரையிறங்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட சந்திரயான் - 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் அசைவற்ற நிலையில் உள்ளது. அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.







இந்நிலையில் லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் களம் இறங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக லேண்டர் விக்ரமிற்கு 'ஹலோ' என்ற மெசேஜ் ஒன்றை நாசா அனுப்பி உள்ளது. ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரமை தொடர்பு கொள்ள நாசா வருகிறது. இஸ்ரோவின் ஒப்புதலுடன், Deep space network (DSN) மூலம் விக்ரமை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.






செப்.,20 - 21 வரை தான் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாசாவின் ஆண்டெனா மூலம் செய்தி அனுப்பப்பட்டு, நிலவில் இருந்து எதிரொலிக்கப்படும் அதிர்வெண்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
15-செப்-201916:28:03 IST Report Abuse
oce பதினாலு நாளைக்கு அப்புறம் அங்கு ஒரே இருட்டு. இந்த நிகழ்வு திடீரென வருவதற்கு வாய்ப்பில்லை. அதாவது பௌர்ணமி வரை சூரிய வெளிச்சமிருக்கும். அதனையடுத்து வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் அமாவாசையாகும். விக்ரம் லேண்டர் 14 நாளைக்கு மேலும் வேலை செய்யும். வெளிச்சம் குறைய குறைய அதன் வேலை திறனும் குறையக் கூடும்.
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201915:55:14 IST Report Abuse
ஆப்பு விக்ரம் லேண்டரின் ஆயுள் செப்டம்பர் 20/21 ந்தேதியோட முடியுது. அதுக்கப்பறம் 14 நாளைக்கு அங்கே ஒரே இருட்டு. சூரிய ஒளி படாது. அதனால் சோலார் பேனல்கள் வேலை செய்யாது. மேலும் தென் துருவத்தில் வெப்பநிலை மைனஸ் 230 டிகிரிக்கு கீழே போய் அதில் உள்ள உபகரணங்கள் நிரந்தரமா வேலை செய்யாம போவதற்கு வாய்ப்பு உள்ளது.விக்ரம் லேண்டர் 14 நாள் வேலைக்குத்தான் வடிவமைக்கப்பட்டது. டீ.வீ ல வல்லுனர்கள் இஷ்டத்துக்கு அது எப்போ வேணும்னாலும்.முழிச்சிக்கிட்டு வேலை செய்யும்னு பேசித் தள்ளறாங்க. காது கிழியுது.
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201915:35:58 IST Report Abuse
ஆப்பு எதுக்கும் நம்ம அரசு மாதிரி 2022 க்குள்ளாற விக்ரம் லேண்டருடன் தொடர்பு எற்பபடுத்தி விடுவோம்னு ஒரு அறிக்கை குடுத்திருங்க. மீடியாவும் சந்திரயானை மறந்துரும். இப்போ காதுகிழியுற மாதிரி செய்தி சொல்லிக்கிட்டே இருக்காங்க. 2022 ல யாரு கேக்கப் போறாங்க. 15 லட்சம், 2 கோடி பேருக்கு வேலைன்னு என்ன மாதிரி கேள்வி கேட்டா சொம்பாலயே அடிச்சுடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X