பொது செய்தி

தமிழ்நாடு

5 நிமிடங்களில் காலியான பொங்கல் ரயில் டிக்கெட்கள்

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சிக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்கள், முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு, காலியாகி விட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



latest tamil news


பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.,12) துவங்கியது. இன்று முதல் செப்.,21 வரை பொங்கல் பண்டிகைக்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜன.,10 ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜன.,11 ம் தேதி செல்வோர் நாளையும் (செப்.,13), ஜன.,12 ம் தேதி செல்வோர் செப்.,14 ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். ஜன.,13 ம் தேதி ஊருக்கு செல்வோர் செப்.,15 ம் தேதி முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.,17 ம் தேதி துவங்க உள்ளது.


latest tamil news


ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில், சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சிக்கு செல்வதற்கான ரயில்களின் டிக்கெட்கள் மட்டும் முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களுக்குள் காலியாகி விட்டன. இதனால் முன்பதிவு செய்ய காத்திருந்த மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆண்டுதோறும் இதே போன்ற பிரச்னை ஏற்பட்டு வருவதால், சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
12-செப்-201921:05:26 IST Report Abuse
R Hariharan ஏன் செங்கோட்டை, தென்காசி பற்றி இதில் எழுதுவதில்லை. இந்த இடங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா. திருச்சி, நெல்லை, மதுரை பற்றி தான் நீங்கள் எழுதுகிறீர்கள். நான் பல தடவை இது பற்றி எழுதியிருக்கிறான்.
Rate this:
Cancel
12-செப்-201920:53:41 IST Report Abuse
ஆப்பு ரயில்களைக் குறையுங்க. அப்போதான் மக்கள் சொந்தக் கார் வாங்கி சொந்த ஊருக்கு போவாங்க.
Rate this:
Cancel
Tamilarasu.M - Tiruvannamalai,இந்தியா
12-செப்-201914:53:51 IST Report Abuse
Tamilarasu.M புதியதாக தொழில் செய்ய விரும்புவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X