பொது செய்தி

இந்தியா

நிர்மலா கருத்து: எதிர்ப்பும், ஆதரவும்

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (161)
Share
Advertisement

புதுடில்லி : இக்கால இளைஞர்கள் புதிய கார் வாங்குவதற்கு இஎம்ஐ கட்ட தயாராக இல்லை. அதற்கு பதில் உபர், ஓலா மூலம் வாடகை வாகனங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணிக்கவே விரும்புகிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் கிளம்பி உள்ளன.latest tamil newsஆட்டோமொபைல் துறை நாடு முழுவதும் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி இல்லாத நாட்களை சமீப காலமாக அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், "நாட்டில் ஆட்டோ துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பிஎஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனப்பதிவு செய்வதில் இருக்கும் விதிகள் மாற்றம் மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு இஎம்ஐ கட்ட தயாராக இல்லை. அதற்கு பதில் உபர், ஓலா மூலம் வாடகை வாகனங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணிக்கவே விரும்புகிறார்கள் " என்றார்.


latest tamil newsதற்போது வாகனத் துறைக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை 18 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது குறித்து சீதாராமன், “ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து நான் தனி நபராக முடிவெடுக்க முடியாது” என்று மட்டும் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் இந்த வார்த்தைகளை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள், டுவீர்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. #BoycottMillennials, #SayItLikeNirmalaTai ஆகிய ஹேஷ்டேக்குள் மூலம் நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.


ஆதரவு கருத்துசரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், 2015 செப்., 10 அன்று, மகிந்தரா குழும தலைவர் ஆனந்த் மகிந்தரா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உபர் மற்றும் ஓலா போன்ற கார் சேவை நிறுவனங்களால், ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய ஆபத்தாக உள்ளது. இன்று, சொந்தமாக கார்கள் வைத்திருக்கும் ஏராளமான வாகனங்கள், தொடர்ந்து, சொந்தமாக வைத்திருக்கவில்லை. போக்குவரத்திற்காக மட்டுமே கார்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறது எனக்கூறினார். இதே கருத்தை தான் தற்போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர், வெளியான , கார் வாங்குவதற்கும் உபர் அல்லது ஓலாவில் பயணிப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து வரும் கணக்கீடுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவில் கார் வாங்க குறைந்த பட்ச விலை ரூ. 6 லட்சம்
6 வருடங்களுக்கு பிறகு, அந்த காரின் கழிவு விலை ரூ.1 லட்சம்
6 வருடங்களில் ஏற்படும் இழப்பு ரூ.5 லட்சம்
6 ஆண்டுகளில் மொத்த நாள்=2200 நாட்கள்
இதனால், ஒரு நாளுக்கு ஆகும் செலவு= ரூ.230(ரூ.5,00,000 / 2200)
ஆண்டு பிரிமீயம் ரூ.15,000
ஒரு நாளுக்கு ரூ.41
ஒரு நாளுக்கு ஆகும் பெட்ரோல் செலவு = குறைந்தபட்சம் ரூ.100
3 ஆண்டுகளுக்கு பின் டயர் மற்றும் பேட்டரி மாற்றுற ஆகும் செலவு = ரூ.25 ஆயிரம்(ஒரு நாளுக்கு ரூ.23)
ஆண்டுக்கு ஆகும் பராமரிப்பு செலவு= ரூ.9 ஆயிரம்
ஒரு நாளுக்கு = ரூ.25
டிரைவர் சம்பளம் = ஒரு நாளுக்கு ரூ.300
கார் வாங்கியதற்காக பெற்ற கடனுக்கான 8 சதவீத வட்டி( 6 லட்ச ரூபாய்க்கு) = ரூ.131(ஒரு நாளுக்கு)
கார் வாங்கிய பின்னர், ஒரு நாளுக்கு ஆகும் செலவு = ரூ.850

கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.850 செலவு ஆவதால், உபர் அல்லது ஓலா வாகனம் மூலம் பயணிப்பது லாபம் தரும் எனவும் கூறுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், உபர் நிறுவனத்தின் நிறுவனரான டிராவிஸ், கலானிக், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மக்கள், கார்களை வாங்குவதை நிறுத்த செய்வதே தனது இலக்கு. சொந்தமாக கார்கள் வாங்கும் காலம் கடந்து விட்டது எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (161)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-201904:44:47 IST Report Abuse
skv srinivasankrishnaveni அவர் சொன்னதுலே தப்பே இல்லீங்களே ,ட்ரெபிக் ஜாமலே மாட்டிண்டு தவிக்கும் பலருக்கு தெரியும் இந்த அவஸ்த்தை, ரோடுகளோ பல்லாங்குழிகளா இருக்கே ஹைவேஸ் காரங்க என்ன சீர் செய்றாங்களா வெளிநாடு சுற்றுலா போயிட்டுவந்தாரு ஈபீஎஸ் அங்கே ரோடுகள் நிலை எப்படீன்னும் பாத்துருப்பாரே தமிழ்நாட்டின் அவந்தரையான ரோடுகள் நியாபகம் வந்துச்சாமா
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
12-செப்-201919:01:23 IST Report Abuse
chakra திறமை இல்லாதவங்க பதவியை விடுவது நல்லது
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
12-செப்-201918:10:15 IST Report Abuse
spr "இக்கால இளைஞர்கள் புதிய கார் வாங்குவதற்கு இஎம்ஐ கட்ட தயாராக இல்லை. அதற்கு பதில் உபர், ஓலா மூலம் வாடகை வாகனங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணிக்கவே விரும்புகிறார்கள்" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து சரியான ஒன்றே என்றாலும், அந்த மனநிலைக்கு அரசும் முக்கியமான காரணம் பெருகி வரும் வாகன வசதிகளுக்கேற்ற தரமான சாலைகள் இல்லை , மாசுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வாகன ஆயுட்காலம் குறைப்பு, மின்சார வாகனம் ஊக்குவிப்பு மத்திய அரசின் வரிவிதிப்பு அதிகரிப்பு வாராக்கடன் கட்டுப்பாடுகளால் வங்கிக்கடன் கிடைக்கவில்லை என்றொரு குறை, பல நிறுவனங்கள் அளவுக்கு மீறிய வீண் செலவுகளால், மேலதிகாரிகளுக்கு கொடுக்கும் சலுகைகளாலும் நிலையில்லாத பங்கு சந்தை மாற்றங்களாலும் மூடும் நிலைக்கு வந்து விட்டது எனவே வேலை நிரந்தரமில்லை என்ற நிலையில் செலுவுகளைக் கட்டுப்படுத்தும் நபர்களின் மனநிலை போக்குவரத்து நெரிசலால் உண்டாகும் "டென்ஷன்" குறைக்கும் முயற்சி இதில் அளவுக்கு மீறி உற்பகுதியாகும் சிற்றுந்துகளின் தரம் அகவிலைக் குறைப்பு என்ற பெயரில் தரம் குறித்த கவனமில்லாமல் உற்பத்தி இவற்றால் ஏற்றுமதி வாய்ப்பும் குறைந்து போயிற்று இப்படி பல காரணங்களால் இந்த நிலை இதில் மக்களின் மனநிலையைவிட அரசின் பொறுப்பற்ற போக்கே முதல் இடம் vagikkiRadhu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X