சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கால்பந்து வடிவில் நவீன வீடு!

Added : செப் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கால்பந்து வடிவில் நவீன வீடு!

சமூக, பொருளாதார காரணங்களால் வீடு இழந்தவர்கள், இயற்கை பேரிடர்களால் வீட்டை பறிகொடுத்தவர்கள். இவர்களுக்கு உதவ, சமூக நோக்குள்ள தொழில்கள் உருவாகியுள்ளன. சமீபத்தில், அமெரிக்காவிலுல்ள, லாஸ் வேகாஸ் நகரில் புதுவகையான வீடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது, 'பயோஷிப்' என்ற 'ஸ்டார்ட் - அப்' நிறுவனம்.கழிவு நீரிலிருந்து கிடைக்கும் உயிரிப் பீங்கான் பொருட்கள் மற்றும் பாஸ்பேட்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் செராமிக் பலகைகளால், வீடுகளை கட்டமைக்கிறது பயோஷிப்.

இது, 500 ஆண்டுகள் வரை அழியாமல் நிலைத்து நிற்கும் என, இதன் நிறுவனர்கள் சொல்கின்றனர்.இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான விஞ்ஞானியான, பக்மின்ஸ்டர் புல்லர், பிரபலப்படுத்திய, 'ஜியோடெசிக் டோம்' என்ற கட்டட அமைப்பை பின்பற்றி பயோஜிப் வீடுகள் கட்டப்படுகின்றன.

கால்பந்தின் மேலுறை வடிவில் இருக்கும் இந்த வீடுகள், இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் வலு கொண்டவை; இவற்றை பழுது பார்ப்பதும் எளிது. அரசுகளின் வீட்டுத் திட்டங்கள் இதை ஆதரித்தால், சில நாட்களில், புதிதாக ஒரு பெரிய கிராமத்தை உருவாக்கி, அதில் வீடற்றவர்களை குடியேற்றி விட முடியுமாம், வீட்டுக் கனவு சீக்கிரம் நிறைவேற, விஞ்ஞானம் உதவிக்கரம் நீட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
13-செப்-201911:17:22 IST Report Abuse
T.S.SUDARSAN தமிழ்நாடு இந்த விஞ்ஞான வீடுகளை கட்டி இலவசங்களை அள்ளித்தரலாம் . இந்த வீடுகளை 1 .50 லட்சத்தில் கட்டி முடிக்கமுடியும் . லஞ்சம் கேட்க கூடாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X