ஜாமின் மனு: சிதம்பரத்திற்கு ஐகோர்ட் கேள்வி

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (41)
Advertisement
chidambaram, bail, delhi high court, சிதம்பரம், ஜாமின், டில்லி ஐகோர்ட்

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த அதேநாளில், உயர்நீதிமன்றத்தை நாடாதது ஏன் என சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னர், கோர்ட் உத்தரவுப்படி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறைகேடு வழக்கில், சிதம்பரம் தரப்பில், ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.





இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்த போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், தனது பதவியை சிதம்பரம் தவறாக பயன்படுத்தியதற்கு வலுவான ஆதாரம் உள்ளது. அவர் மோசடியில் ஈடுபட்டார் என்பதால், தான், உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை எனக்கூறினார்.

சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், குற்றச்சாட்டு இல்லை எனக்கூறினார்.

இதனை தொடர்ந்து, முன்ஜாமின் நிராகரிக்கப்பட்ட நாளில், உச்சநீதிமன்றத்தை நாடிய சிதம்பரம் தரப்பு, ஏன் உயர்நீதிமன்றத்தை நாடவில்லை என கேள்வி எழுப்பியது. மேலும் சிதம்பரம் ஜாமின் மனு மீது, 7 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை செப்.,23க்கு ஒத்திவைத்தனர்.


வாபஸ்


இதனிடையே, நீதிமன்ற காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சிதம்பரம் வாபஸ் பெற்று கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvam - Chennai,இந்தியா
13-செப்-201915:16:10 IST Report Abuse
selvam இன்னும் கொடுமை எல்லோரும் நீதிபதிகள் போல இப்பவே தீர்ப்பு வந்து அவரை குற்றவாளி என்று நிரூபணம் ஆனது போல கூவுறது..ஏங்க இங்கே நம்மூரில் எப்பேர்ப்பட்ட அரசியல் கழகங்கள் {ரெண்டும்தான்} ஊழலில் ஒண்ணுமே செய்யாத மாதிரி அவுங்களுக்கு வெட்கமின்றி மறுபடி மறுபடி நீங்க வோட்டு போடவில்லை ?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-செப்-201921:34:28 IST Report Abuse
Natarajan Ramanathan Why can't Govt. of India exchange chidambaram with kulbushan jadhav under prisoner exchange?
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201918:07:37 IST Report Abuse
J.V. Iyer குற்றம் புரிந்த பிராடு மகிழ்ச்சியாக சிரிக்கிறான். அவமானத்தினால் சாவ வேண்டாமா? நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
Rate this:
Share this comment
selvam - Chennai,இந்தியா
12-செப்-201921:36:04 IST Report Abuse
selvamஅப்பிடி எல்லாமே நடந்தால் 90 சதவீதம் அரசியல்வாதிகள் காணாமல் போய் விடுவார்களே ..பரவாயில்லையா ? நீங்களே நீதிபதி போல பிராடு என்று வேறு முடிவுக்கு எப்பிடி வந்தீங்க ? இங்கே தமிழ்நாட்டில் சிரித்த முகமாக அலையும் அரசியல்வாதிகள் உங்கள் கண்களுக்கு தெரியலை ?...
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
13-செப்-201904:20:48 IST Report Abuse
meenakshisundaramமானமுள்ள எந்த தமிழனும் -ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் -என்று சொன்ன பிராட் களை வாழ்த்தியே வணங்குவானா?...
Rate this:
Share this comment
selvam - Chennai,இந்தியா
13-செப்-201915:08:18 IST Report Abuse
selvamமானமுள்ள தமிழன் 67 க்கு பின்னர் ஆளும் கட்சிகளுக்கு தானே வோட்டு போட்டுகொண்டு இருப்பது பெரிய புத்திசாலித்தனம் அப்படித்தானே அண்ணே ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X