பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019
Advertisement
TN,Tamilnadu,rain,தமிழகம்,தமிழ்நாடு,மழை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 14 செ.மீ., மயிலாடுதுறையில் 13 செ.மீ., திருத்தணியில் 11 செ.மீ., சங்கராபுரம் 8 செ.மீ., காட்டுமன்னார்கோவிலில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.






சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X