பொது செய்தி

இந்தியா

காஷ்மீர்: ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement

காஷ்மீர்: காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதம், வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லாரி சிக்கின.



latest tamil news




காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்தது. மேலும் காஷ்மீர் எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ சுமார் 280 பயிற்சிபெற்ற பயங்கரவாதிகள் எல்லைப்பகுதியில் தயார் நிலையில் உள்ளதாக உளவுத்துறையும் எச்சரித்திருந்தது. இதனால் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று (செப்., 12) பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.,47 ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தியது.


latest tamil news




காஷ்மீரின், கத்வா பகுதியில் நடந்த சோதனையில், சந்தேகப்படும் படி வந்த லாரியை பிடித்து சோதனையிட்டனர். சுகில் லட்டோ என்ற உரிமையாளர் பெயரை கொண்ட அந்த லாரியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததால் ஓட்டுநரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள் 4, ஏகே 47 ரக துப்பாக்கிகள் 2, 6 தோட்டாக்கள் ,11 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. லாரியில் வெடிபொருள் கடத்தப்பட்டது தொடர்பாக 3 ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news




latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-செப்-201919:30:47 IST Report Abuse
Rajagopal இதெற்கெல்லாம் ஒரே வழி, பாகிஸ்தானை சிறிய நாடுகளாகப் பிரித்து விடும் முயற்சியைத் தொடங்குவது. இந்த நாடு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. தொடக்கத்திலிருந்து சுற்றியிருப்பவர்களை மிரட்டி, மற்றவர்களுக்குப் போர் நடத்த இடத்தை வாடகைக்கு விட்டு, அதில் பணம் புரட்டும் ரவுடி போல இயங்கி வருகிறது. பலூசிஸ்தான், சிந்து தேசம், பஷ்டுனிஸ்தான், பஞ்சாப் என்று சிறிய நாடுகளாக்க சர்வதேச அளவில் முயற்சி தொடங்க வேண்டும். இந்தியாவை அழிப்பதே குறியாக எல்லாப் பாகிஸ்தானியர்களும் இல்லை. பஞ்சாபிகள் மட்டும்தான் இந்த மாதிரி மனோபாவத்தோடு இருக்கிறார்கள். அவர்களால்தான் கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்தது. சிறிய நாடுகளாக ஆக்கும் பொழுது, அவர்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கைப்பற்ற முடியும். ஒரு தற்கொலை பயங்கரவாதியின் மனோ நிலைக்கு இந்த நாடு மாறி விட்டது. இதனால் அழிவைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-செப்-201916:25:32 IST Report Abuse
A.George Alphonse இந்த பாக்கிஸ்தான் பயங்கர வாதிகளும் அவன்களை நாய்கள் போலெ ஏவி விடும் அந்தபாகிஸ்தானும்கூண்டோடும்,வேரோடும் அழிக்கப்படவேண்டியவர்கள்.இவர்கள் மேல் எந்த ஒரு தயவோ,தாட்சண்யமோ இல்லாமல் ஒழிக்கவேண்டும். இவர்ககள் இனி நமது அண்டை நாடாக இருக்க தகுதி இழந்தவர்கள்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-செப்-201915:37:19 IST Report Abuse
Endrum Indian தலைப்பை பார்த்தவுடன் காஷ்மீரிலிருந்து வெளியில் செல்கின்றது என்று நினைத்தேன், உள்ளே படித்ததும் தான் தெரிந்தது அது காஷ்மீர் உள்ளே வருகின்றது என்று. அப்போ ஆயுதம் வெடி பொருட்கள் ரொம்ப கொறஞ்சி போயிருச்சா காஷ்மீர் தீவிரவாதிகளிடம், அதான் அவ்வளவு பெரிசாக ஆட்டம் காட்டாமே அடங்கி இருக்கானுங்களா இப்போ காஷ்மீர் உள்ளே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X