சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே பிரச்னை: சென்னிமலை அருகே கும்பாபிஷேகம் நிறுத்தம்

Added : செப் 12, 2019
Share
Advertisement

சென்னிமலை: சிலை வைப்பதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால். சென்னிமலை அருகே நேற்று நடைபெறவிருந்த கோவில் கும்பாபி ?ஷகம் நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது பாலதொழுவு ஊராட்சி. இப்பகுதியில், வெங்கமேடு செல்லும் வழியில் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில். சேதமடைந்திருந்ததால், கடந்த ஓராண்டாக புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபி ?ஷகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில், கோவிலில் சிலை வைப்பது தொடர்பாக, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் பழைய சிலையே வைக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் புதிய சிலை வைக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். சில நாட்களுக்கு முன், பெருந்துறை தாசில்தார் துரைசாமி முன்னிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இரு தரப்பினரையும் சமரசம் செய்து, பழைய சிலை வைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கும்பாபி ?ஷகம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென ஒரு தரப்பினர், அத்துமீறி கோவிலில் புதிய சிலையை வைத்தனர். இதனால், அங்கு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். உடன்பாட்டை மீறி, வைக்கப்பட்ட புதிய சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டனர். ஆனால், அதை அகற்ற மறுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவானதால், அதிகாரிகளது உத்தரவின்படி கும்பாபி ?ஷகத்தை தற்போது நிறுத்தவும், மற்றொரு நாளில் நடத்தவும் முடிவு செய்து ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X