தமிழ் கலாசாரப்படி திருமணம்: சிங்கப்பூர் பெண்ணை மணந்த சென்னிமலை வாலிபர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் கலாசாரப்படி திருமணம்: சிங்கப்பூர் பெண்ணை மணந்த சென்னிமலை வாலிபர்

Added : செப் 12, 2019
Share

சென்னிமலை: தமிழ் கலாசாரப்படி, சிங்கப்பூர் பெண்ணை,சென்னிமலை வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே பசுவபட்டி பிரிவை சேர்ந்தவர் மோகன்குமார், 31, பி.எச்.டி., பட்டதாரி. இவர், சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தி பிரிவில், சீனியர் ஆராய்ச்சி இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ராசாம்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தினர், மூன்று தலைமுறைகளுக்கு முன்,சிங்கப்பூர் சென்று குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த தனலட்சுமியும், மோகன்குமாரும் காதலித்து வந்தனர். பின்னர், இரு வீட்டு பெற்றோருடன் பேசி, தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். சிங்கப்பூரில் இருந்து மணமகள் குடும்பத்தினர், ஒரு வாரத்துக்கு முன், கோவை வந்து தங்கினர். நேற்று, காங்கேயம் நால்ரோடு அருகேயுள்ள, மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் பட்டு வேட்டி,- சட்டையிலும், மணமகள் பட்டு புடவையிலும் இருந்தனர். சிவாச்சாரியர்கள் மந்திரம் ஓதி, உற்றார் உறவினர் வாழ்த்த திருமணம் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள், டாக்டர் எம்.எஸ்., உதயமூர்த்தி எழுதிய, 'எண்ணங்கள்' புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

இது குறித்து மணமகள் தனலட்சுமி கூறுகையில், ''நான் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தேன். தமிழ் கலாசாரத்தை படித்துள்ளேன். இதுவரை தமிழகம் வந்தது இல்லை. இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை, உபசரிப்பு போன்றவை மிகவும் பிடித்துள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X