பொது செய்தி

தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக திருச்சி சரகத்தில் 95 ஆயிரம் வழக்குகள் பதிவு

Added : செப் 12, 2019
Share
Advertisement

கரூர்: திருச்சி போலீஸ் சரகத்தில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக, 95 ஆயிரத்து, 411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது, உயர்நீதிமன்ற உத்தரவுபடி, தமிழகம் முழுவதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருச்சி சரக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் போலீசார், மோட்டார் வாகன சட்டத்தை மீறுவோர் மீது, சிறப்பு கவனம் செலுத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கடந்த, 15 நாட்களில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் சென்றதாக, 95 ஆயிரத்து, 411 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக, 39 ஆயிரத்து, 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட எல்லை பகுதிகளில் சோதனை சாவடி, சுங்க சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில், மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X