தரமான சாலைகளால் விபத்து: கர்நாடக துணை முதல்வர் கண்டுபிடிப்பு

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (66)
Advertisement
தரமான சாலை, கர்நாடகா, துணை முதல்வர்

பெங்களூரு: தரமான சாலைகளால் தான், சாலை விபத்துகள் நடப்பதாக கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் கூறியுள்ளார்.

புதிய மோட்டார் வாகன திருத்தம் சட்டம் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வசூலிக்கப்படும் அபராதங்களை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. குஜராத்தில், அபராதம் குறைக்கப்பட்டது. மேலும் சில மாநிலங்கள் அபராதத்தை குறைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.






இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடகாவில், ஆண்டுதோறும் 10 ஆயிரம் விபத்துகள் நடக்கின்றன. இதற்கு மோசமான சாலைகள் தான் காரணம் என மீடியாக்கள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், தரமான சாலைகளால் தான் விபத்துகள் ஏற்படுகிறது என நான் நம்புகிறேன். பெரும்பாலான விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் தான் நடக்கிறது. அதிக அபராதம் வசூலிப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். கர்நாடகாவில், அபராதம் குறைப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan Iyer - Bangalore,இந்தியா
16-செப்-201923:05:04 IST Report Abuse
Kannan Iyer கடுமையான வார்த்தைகள் தேவை இல்லை. உங்கள் கருத்து வரவேற்க தக்கது பொதுவாக பெண்களும் மயானம் வரை செல்ல விரும்புவதில்லை அவர்களுக்கு விருப்பம் இருந்து மற்றவர்கள் தடுத்தால் அது கண்டிக்க தக்கது மேலும் தாலி துக்கம் என்பது கொடுமையான ஒரு சோகம். துக்கம் விசாரிக்க மற்ற சுமங்கலிகள்/பெண்கள் வந்திருக்கும் வேளையில், அவர்கள் வீட்டில் இருக்கும் போது அப்படி செல்வதும் ஒரு சங்கடம். ஒரு உணர்ச்சி பூர்வமான விஷயத்தை மிக அலட்சியமாக கையாண்டிருக்கிறீர்களோ yendru
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
13-செப்-201915:01:29 IST Report Abuse
narayanan iyer இவர் சொல்வது உண்மை . தரமான சாலை இல்லையென்றால் ஆமை வேகம்தான் போகமுடியும் அப்போ விபத்து எங்கே நடக்கும்?
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201907:57:59 IST Report Abuse
ருத்ரா இவர் சொல்லும் தரமான சாலைகள் தமிழகம் உட்பட ஒரு லேசான மழைக்கு கூட தாங்காது. இனி தரமான வண்டிகள் ஜட்கா, மாட்டுவண்டி தான். போதை, க்ளீனர்கள் ஓட்டும் வரை ரேஸ் மாதிரி கார் ,பைக் cell phone பேசிக்கொண்டே போகும் வரைஎந்த சாலையும் விபத்தை சந்திக்கும். தரம் பற்றி தனிவகுப்பே தொடங்கலாம். Great.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X