பொது செய்தி

இந்தியா

பத்ம விருதுகளுக்கு சிந்து, மேரிகோம் பெயர் பரிந்துரை

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு விளையாட்டு வீராங்கனைகளான பி.வி.சிந்து, மேரி கோம் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



latest tamil news




இந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, விருதுகள் வழங்கப்படும்.

அதன்படி பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறை சார்ந்த வீரர், வீராங்கனைகளின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பத்ம விபூஷண் விருதுக்கும், சமீபத்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவை பத்ம பூஷண் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


latest tamil news




அதேபோல் பத்மஸ்ரீ விருதுகளுக்கு குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
13-செப்-201900:20:06 IST Report Abuse
spr சிறப்பான முடிவே பாராட்டுகள்
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
12-செப்-201914:39:25 IST Report Abuse
தமிழர்நீதி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் சமூகத்தில் சிறந்தோருக்கு, சாதித்தோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு இது ...களுக்கு என்று மாற்றப்பட்டு அல்லலோபட்டு வழங்கப்படுகிறது . இப்போது இது விளையாட்டுக்கு கீ கீ கீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X