8 லட்சம் விவசாயிகள் பலன்: பிரதமர் மோடி

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement
PmModi, farmers,பென்சன், பிரதமர் மோடி, விவசாயிக

புதுடில்லி: விவசாயிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டத்தை துவுக்கி வைத்த பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களால், 8 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள் எனக்கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைய முடியும். 60 வயதை கடந்த பின், விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்கப்படும்.
பிரதமர் மோடி பேசியதாவது: இந்த திட்டத்திற்காக 10,774 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட விவசாயிகளுக்கான பென்சன் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். ஜார்க்கண்டில், 8 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். ஜார்க்கண்ட் மக்கள், புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க உறுதிபூண்டுள்ளோம்.


latest tamil newsநாங்கள் ஆட்சிக்கு வந்த 100 நாளில் முத்தலாக் சட்டத்தை ரத்து செய்தோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்தியுள்ளோம். பொது மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை, அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வைத்துள்ளோம். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் 8 லட்சம் விவசாயிகள் பலன்பெறுவார்கள்.
பா.ஜ., ஆட்சி காலத்தில் ஜார்க்கண்ட் வளர்ச்சி பாதையில் செல்கிறது. தேர்தலுக்கு பின் கூடிய பார்லிமென்ட் தொடர் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. நாட்டின் நலனுக்காக பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காஷ்மீரில் வளர்ச்சியை கொண்டு வருவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
13-செப்-201904:40:02 IST Report Abuse
B.s. Pillai ridiculous. The maximum age for joining thee Insurance is 40. Every month 230/= for 20 years is to be paid by the farmer.Then the Insurance company will pay him 3000/= pm.After 72 years of Independence, the farmer ,who is feeding 130 crores of indians, has to wait for another 20 years to get this 3000/=, provided that he is paying the monthly premium without default. What a joke ? The monthly salaried people themselves are unable to pay the premium regularly. how is it possible for the poor farmer can do this ? The money accumulated by LIC from those who discontinued in between the period, is lying with LIC IN thousands of crores. same thing going to happen in this scheme also. Mr.Modi, please stop giving lecture and do something good for these poor farmers which will give them immediate relief.
Rate this:
Cancel
12-செப்-201920:44:29 IST Report Abuse
ஆப்பு கடந்த 5 வருஷத்துல வருஷம் 2 கோடிபேர் வேலை கிடைச்சு பயனடைஞ்சாச்சு. 100 கோடி பேருக்கு 15 லட்சம் போடற அளவு கருப்பு பணம் வெளியில் கொணாந்தாச்சு. போட்டாச்சுன்னா சொம்புகள் அடிக்க வர்ராங்க.
Rate this:
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
12-செப்-201920:23:46 IST Report Abuse
pazhaniappan அய்யா மோடி அவர்களே , எனக்கு இவ்வளவு பென்ஷன் வரும் என்று மாதாமாதம் எனது ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை ப்ரீமியம் ஆகா கட்டிவந்தேன் அப்படி கட்டி வந்த எனக்கே என்ன பென்ஷன் தருவோம் என்று சொன்னீர்களோ அதை தர மறுக்கிறீர்கள் ,பென்ஷனுக்காக ப்ரீமியம் செலுத்தி பாதியில் விட்டுசென்றவர்கள் , பென்ஷன் பெறுபவர்களுக்கு பிறகு அந்த ப்ரின்ஸிபல் தொகை , none return of capital என்ற முறையில் அரசுக்கு சேர்ந்தது என்று பல லட்சம் கோடிகள் இருந்தும் தர மறுக்கும் நீங்கள் ,விவசாயிகளுக்கு எப்படி தருவீர்கள் . மாதாமாதம் ஊதியம் வாங்கும் மாத சம்பளதாரர் களுக்கே ப்ரீமியம் தொடர்ச்சியாக கட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது அப்படி இருக்கும் போது விவசாயிகள் கட்டும் தொகைக்கு இணையான தொகையை அரசு வழங்கும் என்ற அறிவிப்பால் ஆர்வமிகுதியால் சேர்ந்து விட்டு பின் ப்ரீமியம் செலுத்த வழியில்லாது பாதியில் விட்டுச்செல்பவர்களாகவே விவசாயிகள் இருப்பர் , அனைவருக்கும் வங்கி கணக்கு என்று சொல்லி ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச வைப்புத்தொகை என்று சொல்லி பலகோடி கணக்குகளின் பத்தாயிரம் ரூபாயை அட்டையை போட்டதுபோல் செய்ய மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் . 18 முதல் 40 வயதுள்ளவர்கள் தகுதி உடையவர்கள் என்று சொல்லுகிறீர்கள் 40 வருடத்திற்கு பிறகு தற்போதைய பென்ஷன் தாரர்களை ஏமாற்றியதுபோல் ஏமாற்ற மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் ஒரேயொரு உதாரணம் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு , HPCL என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம் , ONGC என்பது ஒருபொதுத்துறை நிறுவனம் ,யீரெண்டிலும் இந்திய அரசின் பங்கு 55 % அளவில் இருக்கிறது ஆக இரண்டுக்கும் உரிமையாளர் இந்திய அரசு ,ஆனால் ONGC , HPCL நிறுவனத்தை வாங்குவதாக கூறி 27000 கோடி ரூபாயை ஆட்டையை போட்டுவிட்டார்கள் ,அது மட்டுமா ,இப்போ பிபிசில் நிறுவன பங்குகளை ioc வாங்கப்போவதாக கூறி ஒரு 47000 கோடியை அரசு பெறப்போகிறது , இந்த வர்த்தகத்துக்கு முன்பும் , பின்பும் இந்திய அரசுதான் மேற்கூறிய நிறுவனங்களுக்கு உரிமையாளர் அப்போ இந்த பணமாற்றம் எதற்க்காக , இவ்வாறு அட்டையை போட்ட பிறகு என்னை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று சொல்லி தனியாருக்கு விற்கவும் நடவடிக்கைகள் எடுக்க படுகின்றன எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை , இதையெல்லாம் புரிந்து , இவர்களை ஆட்சியிலிருந்து இறக்குவதற்குள் ,எல்லாம் முடிந்துவிடும் . இந்தியா ஸ்வாகா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X