பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் இந்தியாவின் அங்கம்: முஸ்லிம் அமைப்பு

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (46)
Share
Advertisement
India,Kashmir,இந்தியா,காஷ்மீர்

புதுடில்லி: காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு, இந்தியாவின் பெரிய முஸ்லிம் அமைப்பான, ஜமியாத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீர், இந்தியாவின் ஒரு அங்கம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிக்க முடியாது. இந்த இயக்கங்கள் இந்தியாவிற்கு மட்டும் அல்ல. காஷ்மீர் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.
காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணையும் போது தான் அவர்களின் வாழ்க்கை மேம்படும். பாகிஸ்தான், காஷ்மீர் மக்களை கேடயமாக பயன்படுத்தி, காஷ்மீரை போர்க்களமாக மாற்றியது கண்டனத்திற்குரியது.
பாகிஸ்தானின் நடவடிக்கைகள், காஷ்மீர் மக்களை இடர்பாடுகளில் இருந்து மீட்பதற்கும் சிக்கலாக உள்ளது. அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து, காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையும் அமைதியும் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.


latest tamil news


தீர்மானம் குறித்து, அந்த அமைப்பை சேர்ந்த மெகமூத் மதானி கூறுகையில், இந்தியாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதாக ஒரு தோற்றத்தை, சர்வதேச அளவில் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இந்த நடவடிக்கைக்கு, நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் அமைப்புகளில், ஜமியாத் உலாமா-ஐ-ஹிந்த் அமைப்பு பெரியது. இதன் தலைவர் மவுலானா சையத் அர்ஷத் மதானி கடந்த வாரம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தார். அப்போது, ஹிந்து - முஸ்லிம் மக்கள் இடையே ஒற்றுமையை பலப்படுத்துவது, கும்பலால் அடித்து கொல்லப்படும் சம்பவங்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-201909:45:39 IST Report Abuse
பச்சையப்பன் இவரைப் பார்த்தால் இசுலாமியர்கள் போல் தெரியவில்லையே? சும்மா தொப்பி தாடி வைத்தால் இசுலாமியர்கள் ஆக முடியாது. ஏதோ ஒரு யூதன் இசுலாமியர் வேசம் கட்டிக்கொண்டு கருத்து சொல்லிக் கொண்டு நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
14-செப்-201917:19:06 IST Report Abuse
Jayveeஉன்னோட கமெண்டை பார்த்த நீ பச்சை என்று தெளிவாக தெரிகிறது .....
Rate this:
Cancel
subrachi - kuala lumpur,மலேஷியா
13-செப்-201905:35:41 IST Report Abuse
subrachi ஒவ்வொருமுறையும் தீவிரவாதம் தலை தூக்கும்போது அனைத்து மதத்தலைவர்களும் இதுபோன்ற தங்களது கண்டனங்களை அறிவிக்கவேண்டும். அமைதி வழியில் செல்லும் எந்த மதமும் இந்தியாவால் பெரிதும் மதிக்கப்படும்.
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
13-செப்-201901:58:26 IST Report Abuse
jambukalyan அஞ்சாமல் உண்மையை உரைத்தமைக்கு நன்றி, நன்றி, நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X