உலக நாடுகள் நம்பவில்லை: பாக்., அமைச்சர் புலம்பல்

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (25)
Advertisement
india, pakistan, interior minister, இந்தியா,பாகிஸ்தான்,இஜாஸ் அகமது ஷா

இஸ்லாமாபாத்: ''காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் பாகிஸ்தானை நம்பவில்லை. இந்தியாவை தான் நம்பின '' என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தில், பிரிகேடியர் ரேங்கில் அதிகாரியாக பணியாற்றியவர் இஜாஸ் அகமது ஷா. பாக்., அதிபராக முஷாரப், இருந்த போது, அந்நாட்டின் உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் பஞ்சாப் மாகாண பிரிவுக்கு தலைவராக இருந்துள்ளார். பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவத்திலும், அபோதாபாத்தில், பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை பாதுகாப்பாக வைத்த விவகாரத்திலும் இனாஸ் அகமது ஷா பெயர் அடிபட்டது. பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் குறித்து நன்கு அறிந்த அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

இவர் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில், காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் விளக்கி கூறியது. காஷ்மீரில் கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. மக்களுக்கு மருந்துகள் கிடைக்கவில்லை எனக்கூறினோம். ஆனால், சர்வதேச நாடுகள், இந்தியாவை தான் நம்பின. பாகிஸ்தானை நம்பவில்லை. பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்தினர், நாட்டை சீரழித்து விட்டனர்.
நாங்கள் பொறுப்பான நாடு என சர்வதேச நாடுகள் நினைக்கவில்லை. இது தான் உண்மை. உலகத்தின் பார்வையில், பாகிஸ்தான் தோல்வியடைந்த நாடாக தெரிகிறது. இந்த நிலையை மாற்ற இம்ரான் கான் தவறிவிட்டார் என்றார்.

ஆளும் வர்க்கத்தில், இம்ரான் கான், பெனாசீர் பூட்டோ, முஷாரப் ஆகியோர் அடங்குவார்களா என்ற கேள்விக்கு, இஜாஸ் அகமது ஷா கூறுகையில், அனைவரும் பொறுப்பானவர்கள். பாகிஸ்தான் தற்போது, ஆன்மாவை தேட வேண்டும் என்றார். மேலும் அவர், பயங்கரவாத அமைப்பான ஜமாத் உத் தாவா அமைப்புக்கு இம்ரான் கான் அரசு, லட்சக்கணக்கில் பணம் செலவு செய்துள்ளது. அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்காக செலவு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
13-செப்-201907:51:16 IST Report Abuse
சீனி ஏமாற்றி குல்லா போடுவது பக்கிஸ்தானோடு நிற்க்கட்டும். உலகநாடுகள் ஏற்கெனவே விழித்துக்கொண்டன.... உலகத்திலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில், இந்தோனேசியாவுக்கு அடுத்து 2 வது இடத்தில் இந்தியா உள்ளது, எனவே இனி ஊரை ஏமாற்றி குல்லா போட்டுக்கொண்டிருக்க முடியாது. இம்ரான் ஆட்சிக்கு வந்ததும் நயா பக்கிஸ்தான் என முழங்கினாரு, ஆனா இப்ப நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பக்கிஸ்தான மாத்திட்டரு, அதுல நம்ம சுடலைநிதி வேற அவங்களுக்கு ஒத்து ஊதுறாரு....
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-செப்-201923:32:22 IST Report Abuse
Rajagopal பாகிஸ்தான் உண்மையில் முஸ்லிம்களுக்காக உண்டாக்கப் பட்ட நாடு அல்ல. ஆங்கிலேய சாம்ராஜ்யம் உலகப் போர் சமயத்தில் அஸ்தமாமாவோம் என்று அறியவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் வருவதைத் தடுக்க இந்தியாவை ஒரு மையமாக வைத்துக்கொள்ள திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் காந்தியும், நேருவும் அவர்களை வெளியேறு என்று போராட்டம் நடத்தியதால், தென் ஆசியாவில் காலூன்றி இருக்க ஒரு முக்கியமான இடம் தேவைப் பட்டது. ஆப்கானிஸ்தானை அண்டி இருக்கும் பிரதேசம் அதற்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் அதை நேராக செய்யாமல், ஆங்கிலேயர்கள் அவர்களுக்கென்றே உண்டானப் பிரித்து ஆளும் கொள்கைப் படி ஒரு புதிய திட்டத்தை வகுத்தார்கள். இதற்கு ஒரு பிரிவினைவாதி தேவை. அதற்கு ஜின்னா கிடைத்தார். பெயருக்குத்தான் முஸ்லிமாக இருந்த ஜின்னா இப்போது முஸ்லிம்களின் நலனை நினைத்து பாகிஸ்தான் வேண்டுமெனக் கிளம்பினார். இதன் திட்டம் லண்டனில் முதலில் தீர்மானிக்கப் பட்டது. தவிர, உலகப் போர் முடியும் நேரத்தில், இங்கிலாந்து கிட்டத்தட்ட போண்டியாகி விட்டது. சாம்ராஜ்யம் நடத்த வலிமை இல்லை. ஆனாலும் காந்தி கேட்ட சுதந்திர இந்தியாவை அவர்கள் மதிக்கவில்லை. இந்திய தானே உடையும். தங்களின் கீழ் மட்டும்தான் அதனால் நிலைத்திருக்க முடியும் என்பதை நம்பினார்கள். ஆனால் சுதந்திரம் கொடுக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஜின்னாவின் உடல் நிலை மோசமானது. பாகிஸ்தான் வேண்டுமா என்று தேர்தல் நடத்தினார்கள். அது படு தோல்வி அடைந்தது. அதனால் வன்முறைக் கலவரத்தை ஜின்னா ஆரம்பித்தார். ஆங்கிலேய அரசாங்கம் அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் தள்ளி நின்றது. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பெரும் பிளவு ஏற்பட்டது. பாகிஸ்தான் உண்டானது. ஜின்னா இறந்தார். காஷ்மீர் பிரச்னையை வேண்டுமென்றே புகைய விட்டார்கள். அதை வைத்து இந்தியாவையும், பாகிஸ்தானையும் மோத விட்டு, அதனால் அவர்கள் வீழ வழி செய்யும் என்று நம்பினார்கள். பாகிஸ்தான் அவர்களது எண்ணத்தை நிரூபித்தது. வங்காள தேசம் உண்டானது. இந்தியாவோ வளர்ந்தது. அதை அவர்களால் தாங்க இயலவில்லை. பாகிஸ்தானுக்குப் பெரும் ஆதரவு அளித்தார்கள். கடைசியில் ரஷ்யாவை ஆப்கானிஸ்தானுக்குள் வர வைத்து, நிழல் போர் நடத்தி, அதில் வெற்றி கண்டார்கள். பாகிஸ்தான் அணு ஆயுதம் ரகசியமாகத் தயாரிப்பதை பார்த்தும் பாராமல் இருந்தார்கள். சோவியத் யூனியன் மறைந்தது. ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் குறிக்கோள் நிறைவேறியது. அது வரை பாகிஸ்தானில் நாடு வளர்க்கவோ, ஜன நாயகம் வளர்வோ விடாதபடி அவர்கள் ராணுவத்துக்கு ஆதரவு அளித்தார்கள். அவர்கள் வளர உதவி செய்த இஸ்லாமிய பயங்கரவாதம் லண்டனிலும், நியூ யோர்க்கிலும் வெடிக்கவிட்டு அவர்களுக்கு சற்றே நிதானம் வந்திருக்கிறது. பாகிஸ்தான் இனி அவ்ரகளுக்குப் பயன் படாது. இந்தியாவோ மேலும் மேலும் வளர்ந்து ஒரு வல்லரசாகிப் கொண்டிருக்கிறது. அதனால்தான் பாகிஸ்தானை இப்போது சிறிய நாடுகளாகப் பிரித்து விட வேண்டும். இல்லையேல் அவர்கள் தற்கொலைக்குத் தயங்க மாட்டார்கள். அவர்கள் வெடித்தால் சேதம் எல்லா திசைகளிலும் பரவும்.
Rate this:
Share this comment
Jaya - Toronto,கனடா
13-செப்-201901:27:18 IST Report Abuse
JayaThanks for sharing lots of new and logical information which I havent read before....
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
12-செப்-201921:56:28 IST Report Abuse
elakkumanan பிச்சை எடுத்து தீவிரவாதத்தை வளர்க்கும் உன் புத்தி மாறாதவரை, உன் நிலையில் , தரத்தில், பார்வையில், மரியாதையில், வாழ்க்கையில், எந்த மாற்றமும் வந்துவிடாது. நீங்க சொன்னதை, எங்க ஊரில், ஒரு ஏழு, எட்டு சனி பகவான்கள் நம்புதுங்க. இதுக்காக, சந்தோசப்படுங்க, வேற ஒன்னும் செய்ய முடியாது. இது அறுவடை காலம் உங்களுக்கு. விளைச்சலை மாற்ற முடியாது. விதையை மாற்றியிருக்கவேண்டும். இனிமேலேனும், விதையை மாற்றுங்கள். நல்லது விளையும். இல்லையேல், விளை நிலமே இல்லாமல் போகப்போகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X