பொது செய்தி

இந்தியா

மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா'

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (129)
Advertisement

புதுடில்லி: பொருளாதார மந்த நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐந்து யோசனைகளை பரிந்துரைத்துள்ளார்.


நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்து வரும் முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான மன்மோகன் சிங், பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையும், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையும், பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள். ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதில் மட்டும் அக்கறை காட்டுவதை விடுத்து, பொருளாதார விஷயத்தில் பிரதமர் மோடி முழு கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் நாடு பொருளாதார சிக்கலில் இருப்பதை, அரசு ஒத்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்திய பொருளாதாரம் கடுமையான மந்த நிலையில் உள்ளது என்பதை அரசு மறுக்க முடியாது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த காலாண்டில் 5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மட்டுமே உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியும் 15 ஆண்டுகளில் மிகக் குறைவு. பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் பல முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மந்த நிலையை சமாளிக்க, வல்லுனர்களின் கருத்துகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். துறை ரீதியான, அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதை தவிர்த்து, பொருளாதாரத்தை கட்டமைத்து அதனை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே நிறைய காலம் வீணாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த 5 வழிகளையும் பரிந்துரை செய்தார்.


1. ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்:


ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை குறைக்க வேண்டும். இதனால், சிறிது காலத்திற்கு மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும்.


2. விவசாயம்:


விவசாயத்தை புதுப்பித்து, கிராமப்புற நுகர்வை அதிகரிக்க வேண்டும். விவசாய சந்தைகளை விடுவித்தால், மக்கள் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனை காங்., தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளோம்.


3. மூலதனம்:


மூலதன உருவாக்கத்துக்கு பணப்புழக்கத்தை அதிகரித்து, நெருக்கடிக்கு தீர்வு காண்பது அவசியம். இதனால் பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாமல், வங்கி சாராத நிதி நிறுவனங்களும் (என்.பி.எப்.சி.,) பாதிக்கப்படுகின்றன.


4. எளிதாக கடன்:


ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மானிய வீட்டுவசதி துறைகளில் அதிகமான தொழிலாளர்களை இணைத்து, அதனை புதுப்பிக்க வேண்டும். இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதாக கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.


5. ஏற்றுமதி:


தற்போது அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. இச்சமயம், பிறநாடுகளில் புதிய ஏற்றுமதி வாய்ப்பை கவர வேண்டும்.

தற்காலிக பிரச்னைகளுக்கு மட்டுமன்றி, கட்டமைப்பு ரீதியான பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு செய்தால், அடுத்த 3-4 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை மீண்டும் பெற முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-செப்-201911:11:52 IST Report Abuse
Malick Raja இவர் பொருளாதாரம் படித்தவர், முன்னாள் ரிசர்வு வங்கியின் ஆளுநர் , பலநாடுகளுக்கு பொருளாதார ஆலோசனை வழங்கியவர் .முன்னாள் நிதியமைச்சர் ,பிரதமர் இவருக்கு பொருளாதாரம் தெரியாது என்று சில அறிவிலி கூலிப்படைகள் குறைப்பதில் தவறுக்காக முடியாது என்றுகூட மேதாவிகள் சொல்வதும் இயல்பு .
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
14-செப்-201909:18:20 IST Report Abuse
oce நீயே மந்தம். இதில் நீ அதற்கு யோசனை வேறு சொல்கிறாயே.
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201914:41:44 IST Report Abuse
srinivasagan karuppiah excellent.ideas given by our ex Prime Minister....1) modifications in GST2) Agricultural business development 3) creating/ free money movement 4) offering hassle free loan to MSME sectors 5) Export ... development really good suggestions our government should think over this ...thank you
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X