லாரி டிரைவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு, ரூ.2 லட்சத்து ஐநூறு அபராதம் விதிக்கப்பட்டது.



latest tamil news



புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் செப்.,1ல் அமலானது. வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அபராதம் வரி விதிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ள இச்சட்டத்தை, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. குஜராத்தில், அபராத தொகை 50 சதவீதத்திற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. குஜராத்தை பின்பற்ற உள்ளதாக கர்நாடக அரசும் முடிவு செய்துள்ளது. மேற்குவங்கத்தில் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தப்போவது இல்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.


latest tamil news



இந்நிலையில் டில்லி முகர்பா சவுக் பகுதியில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு, 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான சலான் வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், நாட்டில் விதிக்கப்பட்ட அதிக அபராதத் தொகை இதுதான். முன்னதாக அதிகபாரம் ஏற்றி வந்த ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1,41,700 மற்றும் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86.500 விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
13-செப்-201911:14:34 IST Report Abuse
narayanan iyer இப்போதைய மோட்டார் வாகன சட்டம் ஒரு அபத்தம். லாரி ஓட்டுனருக்கு என்ன சம்பளம்? கட்ட முடியுமா? யோசித்து செய்த சட்டம் அல்ல. சரி வாகன உரிமையாளர்தான் கட்ட முடியுமா? தேன் கூட்டில் எறிந்த கல் .
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-செப்-201906:26:00 IST Report Abuse
மலரின் மகள் ஆர் தி ஓ அலுவலகம் மூலம் அனைத்து வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர்களுக்கு புதிய சட்டத்தை தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். சட்டம் இயற்றுவது மட்டும் முக்கியமல்ல, அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சட்டம் தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது, சரி. ஆனால் சட்டத்தை தெரியப்படுத்தட்டுவதற்கு என்ன முயற்சிகளை அரசு எடுத்துட்டிருக்கிறது?
Rate this:
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
13-செப்-201910:18:25 IST Report Abuse
Prof. A.Venkateswaran.இருக்கும் சட்டங்களை மீறுபவர்களுக்கே அபராதம். இருக்கும் சட்டமே தெரியாமல் எவரும் வாகனம் ஓடுவதில்லை. தெரிந்தே மீறுகிறார்கள். என்ன செய்து விடுவார்கள் என்ற ஆணவம். அல்லது கையூட்டு கொடுத்து தப்பித்து விடலாம் என்ற எண்ணம். ஒரு சமுதாயமாக வாழத் தகுதி இல்லாதவர்கள்....
Rate this:
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
13-செப்-201906:12:20 IST Report Abuse
Rajan இப்படி ஓவர் லோடு ஏற்றினால் போடவேண்டியது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X