பொது செய்தி

தமிழ்நாடு

ஜீவசமாதி அறிவிப்பை ஒத்தி வைத்தார் சிவபக்தர்

Updated : செப் 13, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (97)
Share
Advertisement
ஜீவசமாதி,சாமியார்,இருளப்பசாமி

சிவகங்கை :சிவகங்கை அருகே, சிவபக்தர் ஒருவர், ஜீவசமாதி அடைய, தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து இன்று காலை 5.45 மணியளவில் முடிவை ஒத்தி வைத்தார்.

சிவகங்கை அருகே, பாசாங்கரையில் பிறந்தவர், இருளப்பசுவாமி, 77. இவர், 12 வயதில் இருந்தே சிவபக்தர். கடந்த ஆண்டு வரை, திருவண்ணாமலை உட்பட சிவத்தலங்களுக்கு நடந்தே சென்றுள்ளார். 1700 கி.மீ., க்கு மேல் பாதயாத்திரை சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன், 'செப்., 12 இரவு, 12:00 மணி முதல் மறுநாள் காலை, 5:00 மணிக்குள் என் உடலை விட்டு, உயிர் பிரியும். அன்றே எனக்கு ஜீவசமாதி கட்டவேண்டும்' எனக் கூறியுள்ளார்.


latest tamil news



இதன்படி, அவரது, 46 சென்ட் நிலத்தில் எங்கு சமாதி கட்ட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். சில நாட்களாக, வீட்டில் தியானத்தில் இருந்தவர், நேற்று காலை (செப்.12) முதல், ஜீவசமாதி அடைய உள்ள இடத்தில், தியானம் துவக்கினார். இதையறிந்து ஏராளமான பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்றனர்.


மருத்துவ பரிசோதனை


தொடர்ந்து இன்று காலை (செப்.13) சிவபக்தருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 5.45 மணியளவில் ஜீவசமாதி முடிவை சிவபக்தர் ஒத்தி வைத்தார். சமாதி கட்டும் பணிகள் நிறைவடையவில்லை என்பதால் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருளப்பசுவாமி மகன் கண்ணாயிரம் கூறியதாவது: என் தந்தை, கடவுளோடு இணைந்து விட்டதாக, ஆறு மாதங்களுக்கு முன் சொன்னார். சிவன், அவரது கனவில் வந்து, ஜீவசமாதி அடையுமாறு கேட்டதாக கூறினார். உயிர் பிரியும் போது, சிவலிங்கத்தை தழுவியபடியே இருக்க வேண்டும் எனக் கூறினார். இதற்காக, ஆக., 18 முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். உயிர் பிரிந்ததும், 7 அடி ஆழத்தில் விபூதி, மரிக்கொழுந்து, துளசி, வில்வம் இலைகளுடன், லிங்கத்தை அணைத்தபடி அடக்கம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
20-செப்-201913:17:35 IST Report Abuse
venkatesaperumal ஜீவசமாதி உயிர் விடலைவிட்டு பிரிவது அல்ல ஜீவன் ஆதிக்கு (சிவன்) சமம் ஆவதே அது யோக வித்யா பயிற்சியும் & கடும் பக்தி தவத்தால் மட்டுமே இயலும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள் , யார் எச்சிறப்பை பெற்றுள்ளார் என்று சிவன் அன்றி யார் அறிவார்
Rate this:
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
15-செப்-201914:57:23 IST Report Abuse
Kumar periyaar நீங்கள் இப்படியே சொல்லி கொண்டு இருந்தால் மக்களே சமாதி ஆகிவிடுவார்கள்
Rate this:
Cancel
பாரிஸ் எழிலன் - பாரிஸ்,பிரான்ஸ்
14-செப்-201917:01:01 IST Report Abuse
பாரிஸ் எழிலன் அலோ ஒன், டூ, த்ரீ. மைக் டெஸ்டிங், மைக் டெஸ்டிங், இதன் மூலமாக நாங்கள் அறிவிப்பது என்னவென்றால் ஜீவசமாதி, ஜீவசமாதி என்று அறிவித்தும் எங்கள் உண்டியல் சரியாக நிரம்பாததால், இந்த ப்ராஜெக்ட் தள்ளிவைக்கப்பட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X