சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என நினைத்தவர்கள் ஜாமினுக்கு அலைகின்றனர்

Updated : செப் 14, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (42)
Advertisement

ராஞ்சி: ''சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணிக் கொண்டிருந்த பலர், இப்போது ஜாமின் கேட்டு, நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி வருகின்றனர்,'' என, பிரதமர் மோடி கூறினார்.


ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.


அடிக்கல்:


தலைநகர் ராஞ்சியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஜார்க்கண்ட் சட்டசபை கட்டடம், சாஹிப்கஞ்ச் நகரிலுள்ள கங்கை ஆற்றில் சரக்குகள் எடுத்துச் செல்லும் முனையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்; புதிய தலைமை செயலக கட்டடத்துக்கும் அடிக்கல் நாட்டினார். பின், ராஞ்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

தே.ஜ., கூட்டணியின், இரண்டாவது ஆட்சியின் முதல், 100 நாட்களில், ஊழலை ஒழிக்கவும், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கவும், வளர்ச்சியை நோக்கி நகரவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் நலனுக்காக, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு, வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


ஊழல்:


ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தான், நாட்டிற்கான முக்கிய திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம், இங்கு தான் துவக்கி வைக்கப்பட்டது. இப்போது, விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கான ஓய்வூதிய திட்டமும், ஜார்க்கண்டிலேயே துவக்கப்படுகிறது. தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணிக் கொண்டிருந்த பலர், இப்போது ஜாமின் கேட்டு, நீதிமன்ற படிகளில் ஏறி, இறங்கி வருகின்றனர். ஊழல் செய்தவர்கள், எங்கு இருக்க வேண்டுமோ, அந்த இடத்தில் இருக்கின்றனர். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.


இது, 'டிரைலர்' தான்:


விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, பிரதமர் மோடி, நேற்று துவக்கி வைத்தார். சிறு, குறு விவசாயிகள், 60 வயதை அடையும் போது, அவர்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், 2019 - 20ம் ஆண்டுக்கான, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தில் இணைய முடியும். இத்திட்டத்தை, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, நேற்று துவக்கி வைத்தார்.

ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை, பிரதமர் வழங்கினார். சிறு வர்த்தகர்களுக்கு, 60 வயதுக்கு மேல், ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும், பிரதமர் நேற்று துவக்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, ''100 நாட்கள் வெறும், 'டிரைலர்' தான்; முழுப்படம் இனிமேல் தான் வரும்,'' என்றார்.


'கூலி நம்பர் ஒன்' குழுவுக்கு பாராட்டு:


'ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களை ஒழிக்க வேண்டும்' என, பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், கூலி நம்பர் ஒன் பட கதாநாயகன், வருண் தவான், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'கூலி நம்பர் ஒன் திரைப்பட ஷுட்டிங்கில், பிளாஸ்டிக்குகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை; குடிநீருக்கு கூட, 'ஸ்டீல் பாட்டில்' தான் பயன்படுத்துகிறோம்' என, தெரிவித்திருந்தார்.

இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, டுவிட்டரில், பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'பிளாஸ்டிக்கிலிருந்து, இந்தியாவை விடுவிக்க, கூலி நம்பர் ஒன் திரைப்பட குழுவினர் ஆற்றி வரும் பங்கு, பாராட்டத்தக்கது' என, கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
13-செப்-201922:21:25 IST Report Abuse
Sahayam மாட்டு மூளையர்களை ஏமாற்றி வெறும் வாயில் வடை சுட்டு சுட்டு தள்ளும் ஒரே பிரதமர் வாழ்க பாரதம்
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
13-செப்-201922:10:57 IST Report Abuse
samkey இப்படி அடிக்கடி தலப்பாக்கட்டி பிரியாணி போல் போஸ் கொடுப்பதற்கு பதில் நல்ல தங்க கிரீடமாக செய்து நிரந்தரமாக சூட்டிக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
13-செப்-201922:04:49 IST Report Abuse
samkey சிதம்பரத்தை பலிகடா ஆக்கியாச்சி ....மல்லையா நீரவ் மோடி லலித் மோடி எடி கேடி சுடலை வாலு ஆராசா கள்வனின் காதலி ஜெகன் மோகன் ஜெகத் ரட்சகன் எடப்பாடி சின்ன டீக்கடைக்காரர் பெரியம்மா சின்னம்மா சின்னமா புத்ரன் இன்னும் பலர் எல்லாம் புனிதர்களாகிவிட்டனர்
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-201902:19:19 IST Report Abuse
skv srinivasankrishnaveniகாய் சுத்தம் இல்லேன்னா மாட்டின்னுதான் தவிக்கணும் மக்கள் பணம் இஷ்டத்துக்கு எடுத்து சிலவு செய்ரதுக்கும் சேமிக்கவும் செய்யலாமா ???????????????????????????/...
Rate this:
Share this comment
Rajasekar K D - Kudanthai,இந்தியா
16-செப்-201922:51:28 IST Report Abuse
Rajasekar K Dஉங்க கூட்டாளி எடியூரப்பா , தமிழ்நாட்டில் விஜயபாஸ்கர் , அன்பனதன் , சேகர் ரெட்டி , ரெட்டி பிரோதெரஸ் ..... இவர்களை என்ன செய்ய போறீங்க. ஆக மொத்தம் மக்களை ஏமாத்துறீங்க ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X