பா.ஜ.,வுக்கு எதிராக போராட அழைப்பு! சோனியா ஆவேசம்

Updated : செப் 14, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (14+ 16)
Advertisement
bjp,பா.ஜ.,போராட,அழைப்பு,சோனியா,ஆவேசம்

புதுடில்லி: ''லோக்சபா தேர்தலில், மக்கள் அளித்த தீர்ப்பை, பா.ஜ., மிகவும் ஆபத்தான முறையில், தவறாக பயன்படுத்துகிறது,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா பேசினார். மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்தவும், காங்., தொண்டர்களுக்கு, சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் கட்சி சார்பில், டில்லியில் நேற்று, கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கவலை:

இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர், மோடி தலைமையிலான ஆட்சியில், ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொருளாதாரமும் மிகவும் கவலை அளிக்க கூடிய வகையில் உள்ளது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்கான நடவடிக்கைகளை, ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சக்தியையும், உறுதியையும், சோதித்து பார்க்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பொதுமக்களிடம் அம்பலப்படுத்த, விரிவான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும். நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


ஆபத்து:

இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ''நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஏற்படும் ஆபத்தை, ஆட்சியாளர்கள் இன்னும் உணரவில்லை. ''இந்த போக்கு தொடர்ந்தால், வேலைவாய்ப்பு துறை, மிக மோசமான பாதிப்பை சந்திக்கும்,'' என்றார்.

கூட்டம் முடிந்ததும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ஆர்.பி.என்.சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கு, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசை கண்டித்து, அக்டோபர், 15லிருந்து, 25 வரை, நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன், ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சி நிர்வாகிகள், மத்திய அரசை கண்டித்து, பொதுக் கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, அக்டோபர், 2லிருந்து, 9 வரை, பாதயாத்திரை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை. காங்., பொதுச் செயலர் பிரியங்கா, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் குலாம் நபி ஆசாத், அந்தோணி, அஹமது படேல் உள்ளிட்ட, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.


ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை பின்பற்ற காங்கிரஸ் முடிவு:

காங்கிரஸ் கொள்கைகளில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்களை கண்டுபிடித்து, முறையான பயிற்சி அளித்து, அவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள், ஒவ்வொரு மாதமும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், அன்றாட அரசியல், காங்கிரசின் கொள்கை, செயல்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்துவர் என்றும், அதன் அடிப்படையில், காங்கிரசின் கொள்கை, செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்வர் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளவர்களை, பா.ஜ.,வில் சேர்த்து, அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படுவது போன்ற நடைமுறையை பின்பற்ற, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்த, மேலிடம் திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
13-செப்-201921:21:15 IST Report Abuse
Swaroopa Metha பப்பு பட்டாயாவில் போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்…
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-செப்-201918:50:26 IST Report Abuse
RajanRajan எங்கே போரட்டமாம் இத்தாலிலேயா? போவியா கம்முனு அந்தாண்டே பாகிஸ்தான் கைகூலி டூபாகூர்களா.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-செப்-201916:36:36 IST Report Abuse
Endrum Indian கேள்வி கேட்டால்? போராட்டம் நடத்தினால்?? ஏதோ மக்களுக்கு நன்மை செய்வது போல என்ன இந்த ஏமாற்று வேலை???எதற்கு போராட்டம்???முதலில் நீ செய்ய வேண்டியது இது தான் உன்னிடம் இருக்கும் ரூ. 92 லட்சம் கோடியை இந்திய கருவூலத்தில் செலுத்து , பிறகு நீ என்ன சொன்னாலும் மக்கள் உன் பக்கம் தான் இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X