பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள், 'ஸ்டிரைக்' அறிவிப்பு; 4 நாட்கள் வங்கி முடங்கும்

Updated : செப் 14, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
bank,strike,அதிகாரிகள்,ஸ்டிரைக், அறிவிப்பு,4 நாட்கள்,வங்கி,முடங்கும்

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும், 26, 27ம் தேதிகளில், வங்கி அதிகாரிகள், நாடு முழுவதும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், 10 பொது துறை வங்கிகள் இணைக்கப்படும் என, ஆக., 31ல் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்., 1ல், வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது, வங்கி அதிகாரிகள் மட்டும், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்.


'நோட்டீஸ்':

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகள் இணைப் புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உட்பட, நான்கு வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், வரும், 26, 27ம் தேதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். நாடு முழுவதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமான, வங்கி அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் வேலை நிறுத்தத்தால், வங்கியின் செயல்பாடுகள் முழுவதும் முடங்கும். மேலும், ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உட்பட, பல்வேறு கோரிக்கைகளும், இதில் முன்வைக்கப்பட உள்ளன.

வேலை நிறுத்தம் தொடர்பாக, நேற்று, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில், தனியார் வங்கி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதனால், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான, பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்படும். இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


பாதிப்பு ஏற்படும்:

வங்கி அதிகாரிகள், 26, 27ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வரும், 28ம் தேதி, நான்காவது சனிக்கிழமை என்பதால், அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. 29ம் தேதி ஞாயிறு என்பதால், தொடர்ந்து நான்கு நாட்கள், வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்படும்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
13-செப்-201922:35:29 IST Report Abuse
Viswanathan ஒழுங்கா வேலை செஞ்சிருந்தா இந்த நிலை வந்திருக்காது , எதெற்கெடுத்தாலும் யூனியன் சோம்பேறிங்க
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
13-செப்-201920:20:03 IST Report Abuse
R chandar Unwanted strike announcement by bank staff as it leads to give room for public to act adverse against bank staff. This unification of banks is most important one for stabilizing the bank operation and it was a initiation done in previous regime of congress itself which is most required one, unfortunately now it turns in to politicizing the issue. Now all banks to give option to depositors to move on to any bank operation as they want to operate through online tem menu and see that how many peoples are switching over from the existing bank account and close of the unwanted account. Since most of the accounts are linked with aadhar tem , government of India can initiate a tem by making aadhar number as a account numbers for the all account holders and link all accounts of primary depositors accounts as one account and give depositors the benefit of exempt in tax for earning interest from their deposit by making arrangement to deposit cheque and clearing of cheque funds on next day on all days by depositing through ATM machine and box tem
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
13-செப்-201915:43:59 IST Report Abuse
Ashanmugam மோடிஜி ஆட்சியில் நல்ல நாளிலே வங்கிகளில் போதுமான பணம் இருக்காது. இன்னும் வங்கிகள் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே தேவை இல்லை மக்கள் படும் இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும், இந்த லட்சணத்தில் பாரத வங்கியின் அன்றாடம் வாடிக்கையாளர்களின்ATM பணம் எடுக்க ஏகப்பட்ட குளறுபடி கோட்பாடுகள் வேற கேடு. இதெல்லாம் commerce படிப்பு படிக்காத நிதி மந்திரிக்கு எங்கே தெரியபோவது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X