அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெயரால் பிரச்னை: ஸ்டாலின் குமுறல்

Updated : செப் 14, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (56)
Share
Advertisement
dmk,mk stalin,பெயரால்,பிரச்னை, ஸ்டாலின்,குமுறல்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: ஸ்டாலின் என்ற பெயர் எனக்கு வைத்த காரணத்தால் பல இடர்களை அனுபவித்திருக்கிறேன்.

1989ல் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சட்டசபை கமிட்டி வாயிலாக எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ரஷ்யா போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் என் முகத்தை உற்று உற்று பார்ப்பர்.

விமான நிலையத்தில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்வர். என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தனர். ஏனென்றால் ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்னைகள் அங்கு இருந்தன. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் 'சர்ச் பார்க் கான்வென்ட்' பள்ளியில் எனக்கும் தங்கை செல்விக்கும் 'அட்மிஷன்' கிடைத்தது. ஆனால் என் பெயரை மட்டும் மாற்ற வேண்டும் என பள்ளி தாளாளர் கூறினார்.

ஏனென்றால் 'ரஷ்யாவில் அந்தப் பெயரால் மிகவும் பிரச்னை போய் கொண்டிருக்கிறது. அங்கு அவரது சிலைகளை உடைக்கின்றனர். இது ஒரு கிறிஸ்தவ பள்ளியாக இருக்கிறது. எங்களுக்கு எதாவது பிரச்னை வந்து விடும். எனவே இந்த பெயரை மட்டும் மாற்றுங்கள்' என்றார். ஆனால் கருணாநிதி 'பள்ளிக் கூடத்தை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் ஸ்டாலின் பெயரை மாற்ற மாட்டேன்' என்றார்; இது வரலாறு. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manuneedhi chozhan - Thanjai,இந்தியா
16-செப்-201907:34:13 IST Report Abuse
manuneedhi chozhan மகன் பெயரை டாக்டர் விஞ்ஞானி எப்படி சார் தமிழில் எழுதினார் ? ஸ்ஸ்ஸ் எங்கேயோ இடிக்குதே ,
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
14-செப்-201918:24:49 IST Report Abuse
Poongavoor Raghupathy Kalaignar should have changed his name Karunanidhi which is a Sanskrit name. Many other names in DMK like Dayanidhi, Udayanidhi etc. DMK does not want to leave Nidhi even from their names because Nidhi in Sanskrit is money. DMK in case of money even prepared to have Sanskrit in their names. This is because DMK is propagating their ideologies to fool the people and to swindle Nidhi for their families. DMK preaches many but do not practice except to loot as much as possible. DMK is kept in a corner by Jayalalitha for so many years without any power.
Rate this:
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
14-செப்-201914:11:15 IST Report Abuse
sankar அப்போதே சர்ச் பார்க்கில சேர போனாராம் ..... ம்ம்ம்ம்ம் இவரை சேர்த்து இருந்தால் தகப்பனை ??? மிஞ்சி இருப்பார் போல .... நல்லவேளை தமிழகம் தப்பி பிழைத்தது .... கூடவே சர்ச் பார்க்கும் தான் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X