கடலோர பாதுகாப்புக்கு அதிநவீன ரோந்து படகு

Added : செப் 13, 2019
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு, புதிய அதிநவீன ரோந்து படகு வழங்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை, மாவட்டத்தில், 78 கி.மீ., நீண்ட கடற்கரை உள்ளது. கடல் பகுதிகளில், பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், காணாமல் போன மீனவர்களை மீட்கவும் வழங்கப்பட்டிருந்த, நான்கு படகுகளும், பழுதான நிலையில் இருந்தன.இதனால்,

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு, புதிய அதிநவீன ரோந்து படகு வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை, மாவட்டத்தில், 78 கி.மீ., நீண்ட கடற்கரை உள்ளது. கடல் பகுதிகளில், பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், காணாமல் போன மீனவர்களை மீட்கவும் வழங்கப்பட்டிருந்த, நான்கு படகுகளும், பழுதான நிலையில் இருந்தன.இதனால், அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்ட புதிய படகு வழங்கப் பட்டுள்ளது. ஆழ்கடலிலும் இந்த படகில் சென்று, சோதனை நடத்த முடியும்.இயற்கை பேரிடர் காலங்களிலும், கடலில் சென்று, மீட்பு பணிகள் மேற்கொள்ளவும், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றவும் இந்த படகு உதவும். நேற்று, சென்னையில் இருந்து லாரியில் வந்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X