பளு மட்டுமல்ல... கப்பையும் 'துாக்கிட்டாங்க!'

Added : செப் 13, 2019
Advertisement
கோவை:பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவிகளுக்கான பளுதுாக்கும் போட்டியில், மாணவிகள் தங்கள் முழு திறமையும் வெளிப்படுத்தி அசத்தினர்.கோவை, பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவிகளுக்கான பளுதுாக்குதல் போட்டி, சுங்கம் நிர்மலா கல்லுாரியில் நடந்தது.ஒன்பது கல்லுாரிகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். 45, 49, 55, 59, 64, 71, 76, 81, 87, +87 உள்ளிட்ட பல்வேறு
 பளு மட்டுமல்ல... கப்பையும் 'துாக்கிட்டாங்க!'

கோவை:பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவிகளுக்கான பளுதுாக்கும் போட்டியில், மாணவிகள் தங்கள் முழு திறமையும் வெளிப்படுத்தி அசத்தினர்.கோவை, பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவிகளுக்கான பளுதுாக்குதல் போட்டி, சுங்கம் நிர்மலா கல்லுாரியில் நடந்தது.
ஒன்பது கல்லுாரிகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். 45, 49, 55, 59, 64, 71, 76, 81, 87, +87 உள்ளிட்ட பல்வேறு எடை பிரிவுகளில், போட்டிகள் நடந்தன.நேற்று நடந்த, 45 கிலோ எடை பிரிவில், நிர்மலா கல்லுாரியின் சவுமியா, கமலம் கல்லுாரியின் கலைமணி, கோபி பி.கே.ஆர்., கல்லுாரியின் சவுமியா; 49 கிலோ எடை பிரிவில், நிர்மலா கல்லுாரியின் தனலட்சுமி, ஐஸ்வர்யா, ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியின் ஹரினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
55 கிலோ எடை பிரிவில், நிர்மலா கல்லுாரியின் என்.காவியா, கமலம் கல்லுாரியின் தமிழ்செல்வி, ரூபிகா; 59 கிலோ எடை பிரிவில், கோவை பாரதியார் பல்கலையின் ஸ்ரீதேவி, கமலம் கல்லுாரியின் எஸ்.காவியா, நிர்மலா கல்லுாரியின் ஜோஸ்வின் ஆகியோர் முதல், மூன்று இடங்களை பிடித்தனர். முன்னதாக, நிர்மலா கல்லுாரி டீன் மேரி, முதல்வர் ஹெலன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஸ்ரீமதி, போட்டி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X