டிரெண்டிங் ஆனது பியூஸ் கோயலின் உளறல் பேச்சு

Updated : செப் 13, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (79)
Share
Advertisement
டிரெண்டிங் ஆனது பியூஸ் கோயலின் உளறல் பேச்சு

புதுடில்லி: நாட்டின் பொருளாதார நிலை குறித்து விஞ்ஞானி நியூட்டனுக்கு பதிலாக ஐன்ஸ்டீனை உதாரணமாக கூறிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.
அகில இந்திய அளவிலான வர்த்தக வாரியத்தின் உயர்மட்டக்கூட்டம் டில்லியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடந்தது. இதில் இணை அமைச்சர்கள் ஹர்தீப்சிங் பூரி, சோமபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பியூஸ் கோயல் அளித்த பேட்டி, நாடு 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை அடைய வேண்டுமானால், 12 சதவீத வளர்ச்சியுடன் செல்ல வேண்டும்.


latest tamil newsஆனால் நாம் தற்போது, 6-7 சதவீத வளர்ச்சி தான் கொண்டுள்ளோம். பொருளாதாரத்தில் கணக்கீடுகளைக் கொண்டுவராதீர்கள்... ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை. எனவே டிவி சேனல்களில் வரும் தகவல்கள் மூலம் பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளாதீர்கள் என்றார்.இவ்வாறு பியூஸ் கோயல் கூறியது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என கூறியது, சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக பொருளாதார மந்த நிலை குறித்து சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது ஓலா, உபர் போன்றவைகளை அதிகம் பயன்படுத்துவதால்தான் மோட்டார் வாகனத் துறை கடும் பின்னடைவை சந்தித்தது என கூறினார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைதளங்கள் அனைத்திலும் நிர்மலா சீதாராமன் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தற்போது மற்றொரு மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் அளித்துள்ள பேட்டி டிரெண்டிங்காகி வருகிறது.
இது குறித்து காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியது, ஆமாம் ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க கணக்கு உதவவில்லை. ஏனெனில் அவருக்கு முன்னரே நியூட்டன் அதை கண்டுபிடித்துவிட்டார் என கிண்டலடித்துள்ளார். இதே போன்று மீம்ஸ்களும் பியூஷ் கோயலின் கருத்தை முன்வைத்து விமர்சிக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-செப்-201914:25:49 IST Report Abuse
Malick Raja கூலிப்படைகள் உடனடியாக காலத்தில் இறங்கி கருத்துக்கள் ரொம்பவும் சகஜமாக ஒன்றுமே நடக்கவில்லை .. அத்தோடு மிகப்பெரிய வளர்ச்சியை நாம் விரைவில் பெறுவோம் .. என்றும் கலாய்ப்பர்கள் அவர்களின் ஊதியத்திர்க்கு ஏற்றார் போல் வேலை செய்யட்டும்
Rate this:
Cancel
13-செப்-201913:19:29 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எதிர்கட்சிகளை எதெற்கெடுத்தாலும் சர்ச்சை தான் , ஓலா , உபேர் சரியான விலையில் , நகரம் முழுவதும் சேவை கிடைப்பதால் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் , கார்களை வாங்க ஆர்வம் குறைந்திருக்கிறது என்று சொன்னாலே சர்ச்சையா ? முன்பெல்லாம் ஆட்டோக்காரனை கூப்பிட்டாலே வாய்க்கு வந்த தொகையை கேட்பதும் , குறைத்து கேட்டால் சாவு கிராக்கி , இதெல்லாம் ஆட்டோவில் போகிற மூஞ்சா ? என்று கண்டபடி திட்டுவதும் நடந்தது , இப்போது யாரிடமும் விலை பேச வேண்டியதில்லை , தெருவில் மணிக்கணக்கில் நின்று பலபேரிடம் பேரம் பேச வேண்டியதில்லை எனும்போது மக்கள் இந்த சேவையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதை சொன்னாலே சர்ச்சையா ?
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
14-செப்-201908:21:52 IST Report Abuse
Amal Anandanவாங்குற காசுக்கு நல்லாவே கூவுராபா....
Rate this:
Cancel
13-செப்-201913:15:38 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஐஸக்கோ , ஐன்ஸ்டீனோ , இந்த இரண்டு வெள்ளைக்காரர்களுக்கு முன்னமேயே நம் முன்னோர்கள் கோள்கள் மற்றும் அதன் இயக்கங்களை கணித்து விட்டார்கள் , இனிமேல் வெள்ளைக்காரர்களை உதாரணம் சொல்வதை நிறுத்துங்கள்.
Rate this:
Adhithyan - chennai,இந்தியா
13-செப்-201916:11:23 IST Report Abuse
Adhithyanரொம்ப முதுகு வளஞ்சா வில் போல ஆகிடும் நிமிந்து நில்லுங்க ..வெள்ளக்காரன் தான் புவி ஈர்ப்பு கண்டுபிடிச்சான் கோள்கள் அதன் இயக்கங்களை நம் முன்னூர்கள் கணிக்கும் முன்பே எகிப்து கிரீக் போன்ற நாடுகளில் Claudius படோலேமி போன்றவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் சரியான இயக்கங்களை அமைப்புகளை கணித்து விட்டார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X