பொது செய்தி

இந்தியா

தவளைகளுக்கு "டைவஸ்" : ம.பி., மக்கள் கூத்து

Updated : செப் 13, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

போபால் : மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் அதிகப்படியான மழையை நிறுத்துவதற்காக ஓம் சிவ்சேனா மண்டல் அமைப்பினர் தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்துள்ள கேலிக்கூத்தான சம்பவம் நடந்துள்ளது.



latest tamil news


கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ம.பி.,யில், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் ஜூலை 19 ம் தேதி 2 தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்படி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை கடவுளான இந்திரன் மனம் குளிர்ந்து, மழை பெய்து ஆசீர்வாதம் செய்வார் என்ற நம்பிக்கை அங்கு நிலவி வருகிறது. ஆனால் நேர்மாறாக ம.பி.,யில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.


latest tamil news


செப்.,11 ம் தேதி மட்டும் வழக்கத்தை விட கூடுதலாக 26 சதவீதம் மழை பெய்ததால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. செப்.,8 ம் தேதி போபாலில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்ததது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் போபாலில் 48 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் நிரம்பி வழியும் கொல்லர் அணை, 3 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் ம.பி.,யில் இதுவரை 200 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


கனமழை, வெள்ளத்தால் நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதற்காக இந்திரபுரியை சேர்ந்த ஓம் சிவ்சேனா மண்டல் அமைப்பினர் செப்.,11 அன்று மாலை, 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்த 2 தவளைகளுக்கும் விவாகரத்து செய்து வைத்துள்ளனர். இதற்காக கோயிலில் விழா ஒன்று நடத்தப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு, விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
13-செப்-201916:59:33 IST Report Abuse
Arasu சங்பரிவார்க்கு மண்டைல களிமண் தான் இருக்கு
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
13-செப்-201916:28:14 IST Report Abuse
oce நம்ம ஊரிலும் இதை செய்யலாமே. நல்ல திட்டமாக தெரிகிறதே. கூவத்தில் நிறைய தவளைகள் உள்ளன. அவைகளை பிடித்து குளிப்பாட்டி டிரஸ் செய்து திருமணம் செய்யலாம்.தவளைகளில் எது ஆண் எது பெண் என்று தெரிந்தவர்களை விட்டு தவளைகளை பிடிக்கலாம். நிறைய மழை பெய்யும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-செப்-201916:10:11 IST Report Abuse
Endrum Indian டைவ"ர்"ஸ் "ர்" விட்டுப்போயிருக்கின்றது. முன்னாடி மழை பெய்ய கழுதைகளுக்கு திருமணம் அல்லது தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் அதைப்போலத்தான் இதுவும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X