பொது செய்தி

இந்தியா

காவி உடை, குங்கும பொட்டு : பிஷப்பின் சர்ச்சை 'கெட்-அப்'

Updated : செப் 13, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (100)
Share
Advertisement

கர்வார் : கர்நாடகாவில் பிஷப் ஒருவர் காவி உடையில், நெற்றியில் குங்கும பொட்டு வைத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது நாடு முழுவதிலும் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.



latest tamil news


கர்நாடகாவின் பெல்காம் மாவட்ட சர்ச் பிஷப், தீரக் பெர்னாண்டஸ். இவர் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பிஷப் தீரக் பெர்னாண்டஸ் காவி உடையணிந்து, நெற்றியில் திலகம் இட்டு நடந்து வருகிறது. அவருடன் அடையாளம் தெரியாத ஒருவரும் அதே போன்ற கெட்-அப்பில், கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து நடந்து வருகிறார். அத்துடன், இந்து சாமியார்களுடன் பிஷப் பெர்னாண்டஸ், சர்ச் வளாகத்தில் கிறிஸ்தவ மத சடங்குகளை நடத்தும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த படங்களை பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான சாவியோ ரோட்ரிகஸ் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த சிலர், போப் பிரான்சிசால் மே 1 ம் தேதி பெல்காமின் 6வது பிஷப்பாக நியமிக்கப்பட்ட பெர்னாண்டஸ், இந்துக்களை தவறாக வழிநடத்தி, அவர்களை மதமாற்றம் செய்ய பார்க்கிறார் என குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் கிறிஸ்தவர்கள் பலர், பிஷப்பின் நடவடிக்கைகள் மதத்திற்கு எதிராக உள்ளதாக டுவிட்டரில் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பிஷப் பெர்னாண்டஸ் தற்போது ரோமில் உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news




பெல்காமில் இருந்து 28 கி.மீ., தூரத்தில் உள்ள தேஷ்னுர் சர்ச்சிற்கு பிஷப் பெர்னாண்டஸ் ஆக.,29 அன்று வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி மதபோதகர் பிலிப் குட்டி ஜோசப் கூறுகையில், இந்த சர்ச் இதற்கு முன் விரக்தா மடம் என அழைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக இங்கு வந்த கிறிஸ்தவ மதபோதகர்கள், இங்கு பிரார்த்தனை செய்ய துவங்கினர். இந்தியர்களின் வழக்கப்படி காவி நிற கொடியும் ஏற்றப்பட்டிருந்தது. வழிபாட்டு தலம் கூட சிவலிங்க வடிவிலேயே இருக்கும் என்றார்.

மேலும் முதலில் இப்பகுதிக்கு வந்த மத போதகர்கள் இங்கு வாழ்ந்த மக்களை மத மாற்றம் செய்யவில்லை. மாறாக இங்கு வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்திற்கு மாறி, அவர்களை போல் சைவ உணவு பழக்கங்களையே கடைபிடித்தனர். ஆனால் பிஷர் பெர்னாண்டஸ் எதற்காக இது போன்ற தோற்றத்தில் வந்தார் என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் பிஷப் பெர்னாண்டசின் இந்த புகைப்படங்களை வெளியிட்ட பத்திரிக்கையாளருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201915:37:09 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இறைவன் ஒன்றுதான், அன்பே சிவம்
Rate this:
Cancel
17-செப்-201915:35:58 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மதம் மாற்றும் கும்பல்கள் தடை செய்யப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Radhakrishnan - Pune,இந்தியா
16-செப்-201916:17:08 IST Report Abuse
Radhakrishnan காவி தீவிர வாதம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X