கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பேனர் வழக்கில் ஐகோர்ட் கண்டனம்; அதிகாரிகளுக்கு கொடுத்தது சாட்டையடி

Updated : செப் 13, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (74)
Share
Advertisement
பேனர், சென்னை ஐகோர்ட், அதிகாரிகள், மெத்தனம்

சென்னை: சென்னையில் சட்டவிரோத பேனர் விழுந்து இளம்பெண் பலியானது தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர், இன்னும் எத்தனை உயிர்ப்பலிகளை எதிர்பார்க்கிறீர்கள் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் பைக்கில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. இதில், கீழே விழுந்த அப்பெண் மீது லாரி ஏறியதில், பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர், அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


latest tamil newsஇந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என லட்சுமி நாராயணன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார்.


விஐபிக்கள் வருவார்களா ?


இந்த விசாரணையில் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா ? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். இன்னும் எத்ததை உயிர்களை பலி வாங்க துடிக்கின்றனர். சட்டவிரோத பேனரில் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் இன்னும் இது போன்றுதான் தொடர்கிறது.
பேனர் வைத்தால்தான் விஐபிக்கள் வருவார்களா ? சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுங்கள். கோர்ட் உத்தரவுகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். உத்தரவு பிறப்பிக்கும் கோர்ட்டுக்கு செயல்படுத்த முடியாது என நினைக்றீர்களா ? பேனர் வைக்க மாட்டோம் என முதல்வரே அறிக்கை விடலாமே !
எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்னை தீர்ந்து விடுவதாக நினைக்கின்றனர்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மதியத்திற்குள் அரசு தரப்பில் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து மதியம் நடந்த விசாரணையில், பேனர் தொடர்பாக அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


அதிகாரிகள் பாரபட்சம்


இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர், பேனர் வைக்க கூடாது என அரசு மற்றும் பிற கட்சிகள் சார்பாக அறிக்கை அளித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது, என கூறினார்.
நீதிபதிகள், பேனர் வைக்கக்கூடாது என அரசியல் கட்சியினர் முன்பே முடிவெடுத்திருந்தால் உயிர் பலி நிகழ்ந்திருக்காது. இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும். இதுவரை விவகாரத்திற்கு மட்டும் தான் பேனர் வைக்கவில்லை. அனைத்து விசேஷங்களுக்கும் பேனர் வைத்தால் தான் அமைச்சர்கள் வருவார்களா?
2 மணி அளவில் நடந்த விபத்திற்கு 6 மணிக்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வளவு அலட்சியம் ஏன். பேனரில் உள்ள வண்ணங்கள் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது.
சுபஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அந்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். அனுமதி அளித்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பணியில் கவனக்குறைவாக இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன். கமிஷனர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். மேலும் சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
14-செப்-201919:10:29 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தன் மகனையே தேர்க்காலில் இட்டு கொன்று நீதியை நிலைநாட்டிய தமிழர்கள் வாழ்ந்த மண். நீதிமன்றங்கள் இனி ஜாமீன் தருவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இத்தகைய பேனர்களினால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டும் திருந்தாத அரசு அரசியல் கட்சிகள்.
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
14-செப்-201901:06:00 IST Report Abuse
Nagarajan Duraisamy யாருக்கும் ஒரு தண்டனையும் கிடைக்கப்போவதில்லை...சாட்டையடி என்று வாயால் சொன்னால் போதாது. இவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்கு என்பதை மறந்து செய்யும் செயல். அரசு வேலை குற்றம் செய்பவர்களிடமிருந்து பறிக்க பட வேண்டும்...இட மாற்றம் மட்டும் செய்தால் இப்படி தான் நடக்கும்.
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201900:54:14 IST Report Abuse
Ramesh R சாட்டையடி not enough...........theruvil oda oda viratti adikkanum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X