ஸ்வீட் ஸ்வேதா

Added : செப் 13, 2019
Advertisement
ஸ்வீட் ஸ்வேதா

அருவா வீசும் கூர்மை புருவம்... மெதுவா மயக்கும் மெழுகு உருவம்... இதழ்களில் மலர்ந்தாடும் ரோஜா தோட்டம், மோகம் கொண்டாடுமே மேகக் கூட்டம், கொஞ்சும் அழகும் கெஞ்சும், இளசுகள் எல்லாம் உன்னுள் தஞ்சம்... என, வர்ணிக்க வார்த்தைகளை தேட வைத்து விடுகிறார்... டாப் டென் அழகிகள் வந்தாலும் முதலிடம் பிடிக்கும் நடிகை ஸ்வேதா ஸ்ரிம்டன். அவர் அளித்த ஸ்வீட் பேட்டி...
* அழகின் அறிமுகம் சொல்லலாமே ?சென்னைக்கார பொண்ணு, டிராவல் மேனேஜ்மென்ட் படிச்சுட்டு மாடலிங், குறும்படம், விளம்பரம், ஆல்பம் பண்ணிட்டு இருந்தேன். 'கிராமத்தில் ஒரு நாள்'ங்குற 'டிவி' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பின் பிரபலமாகி, சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானேன்.
* என்னென்ன படங்கள் நடித்தீர்கள் ?வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவி படும் துன்பங்களை பதிவு செய்த 'நயம்' தான் எனக்கு முதல் படம். முதியவர் ஒருவரிடம் சிக்கிய என்னை அவர் ஆடையின்றி ரசிப்பது போன்ற காட்சியில் நடித்தேன். விரைவில் படம் வெளியாக உள்ளது.
* 'நயம்' ஆடை படத்தின் தாக்கமா ?இல்லை. 'ஆடை'க்கு முன்பே 'நயம்' ஆரம்பிச்சாச்சு. ஆனால், 'ஆடை' படப்பிடிப்பு நடக்கும் போது தான் இந்த படத்தில் ஆடையில்லா காட்சியை எடுத்தாங்க.
* ஆடையின்றி கேமரா முன் எப்படி... ?நடிப்பு திறமையை நிரூபிக்க இதெல்லாம் செய்ய வேண்டியிருக்கு. இதுவும் ஒரு சவால் தான். என்ன தான் 'ஸ்கின் டிரஸ்' போட்டிருந்தாலும் பயமாகவும், பலவீனமாகவும் இருந்தது. சிறிய அறைக்குள் குறைவான ஆட்களுடன் தான் படப்பிடிப்பு நடந்தது. அந்த ஒரு விஷயம் எனக்கு ஆறுதலாக இருந்தது.
* கைவசம் உள்ள படங்கள் என்ன ?மினி பட்ஜெட் படங்களான 'அடிச்சுவடு', 'சில்லாக்கி டும்மா' படங்களில் நடிக்கிறேன். அதர்வா கூட நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படத்தில் 'லிப் லாக்' காட்சியில் நடிக்க சொன்னதால் சம்மதிக்கவில்லை. இயக்குனர் சுந்தர்.சி படத்தை கூட சில காரணங்களுக்காக தவிர்த்து விட்டேன்.
* மினி பட்ஜெட் படங்களில் நடிப்பதுமினி பட்ஜெட் படங்களில் நடிக்கும் போது 'நீ இப்படி நடி, அப்படி நடி' என்று யாரும் சொல்லவில்லை. நான் தான் இந்த நடிப்பு போதுமா, இன்னும் அதிகமாக நடிக்கனுமா என்று கேட்பேன். மெகா பட்ஜெட் படங்களில் இந்த வசதிகள் இருக்காது. எதிர்காலத்தில் மெகா பட்ஜெட் படத்திலும் நடிப்பேன்.
* 'லிப் லாக்'கில் நடிக்க பிடிக்காதா ?கிளாமரா நடிக்கச் சொன்னால் நடிப்பேன்... ஆனால், 'லிப் லாக்' காட்சிகளில் நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். என் படங்கள் என் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்குற மாதிரி தான் இருக்கனும். 'நயம்' படத்தில் ஆடையில்லா காட்சிகளில் கூட சில நொடிகள் தான் வரும்.
* குறும்படங்கள், ஆல்பங்கள் நடிப்பு ?இரண்டு நாட்கள்', 'இலையுதிர் காலம்', 'சத்திய சோதனை' குறும் படங்களில் நடிச்சிருக்கேன். 'சென்னை பொண்ணு'ங்குற ஆல்பம் சாங்க யுவன் சங்கர் ராஜா யூ டியூப் சேனலில் வெளியாகி டிரண்டிங் ஆச்சு. அப்புறம் 'மாயாவி' ஆல்பம், 'ஆத்மா' வெப் சீரியஸ் பண்ணியிருக்கேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X