'ஜோக்கர்' படத்தில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியனின் கிளாமர் போட்டோக்கள் தொடர்ந்து பல நாட்களாக டிரண்டிங்கில் இருக்கிறது. சேலை அணிந்த சோலையாக இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்த அழகி நமக்காக மனம் திறக்கிறார்..
* ஒரேநாளில் உலகப்புகழ் ஆகிட்டீங்க எப்படி? போட்டோ ஷூட் எடுக்கும் ஆசையில் சாதாரண சேலை கட்டிதான் எடுத்தேன். அதை ரசிகர்கள் இப்படி வைரலாக்கிட்டாங்க. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ரசிகர்களுக்கு நன்றி.
* குஷி ஜோதிகா இடுப்பு - உங்க இடுப்பு குறித்த மீம்ஸ் ஒப்பீடு ?எந்த மீம்ஸ் பார்த்தும் நான் சீரியஸா, எடுத்துக்கல. அதே மாதிரி தான் இந்த மீம்ஸ் பாத்தும் நான் சிரிச்சேன். என்னை வைச்சு காமெடி பண்ணிகிட்டு இருக்காங்க.
* இந்த போட்டோ வெளியிட்டது எப்படி ?இதற்கு முன் நான் எடுத்த பல போட்டோக்கள் வைரல் ஆனது. சொல்லப்போனால் முதல் நாள் ஒரு போட்டோ போஸ்ட் பண்ணினேன், அப்புறம் இன்னொரு நண்பர் ஒரு போட்டோ போஸ்ட் பண்ணினார். அடுத்த நாள் நிறைய போன் எனக்கு வந்துச்சு. அத்தனை சமூக வலைதளங்களிலும் என் போட்டோ தான்.
* தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்திற்கு பின்?'ஜோக்கர்'ல் என் நடிப்பை பார்த்து பாராட்டினாங்க. அதே மாதிரி 'ஆண் தேவதை' படமும் அமைந்தது. ஆனால், நான் வெளியே தெரியவே இல்லை. இந்த போட்டோக்கள் என்னை பெரியளவில் வெளியே கொண்டு வந்திருக்கு.
* இந்த ரீச் தற்காலிகமானது தானே ?என் எண்ணம் போட்டோ ஷூட்ல ரீச் ஆகணும் என்பது அல்ல. தற்செயலாக நடந்த விஷயம் தான். அடுத்து நல்ல கதைகளை நோக்கி பயணிக்க போகிறேன். கண்டிப்பா தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடிப்பேன்
* உங்க போட்டோக்களுக்கு பெண்கள் ரியாக்ஷன் ?என் போட்டோ பாத்து ஒரு தெரிஞ்ச பொண்ணு போன்ல மெசேஜ் அனுப்பினாள். போட்டோக்களை போஸ்ட் பண்ணாதீங்க; நல்லா இல்லைன்னு சொன்னாங்க. ஆனால் அதுக்கு முன்பே அந்த போட்டோக்களை போஸ்ட் பண்ணிட்டேன். நீங்கள் கூறியது போல நிறைய ஆண்கள் தான் கவிதைகளும், மீம்ஸ்களும் போஸ்ட் பண்றாங்க.
* இந்த போட்டோக்களுக்கு பின் வாய்ப்பு ?இப்போ நிறைய வித்தியாசமான கதைகள், கேரக்டர்கள் தேடி வந்திருக்கு. ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் ஐடியா இல்லை.
* அடுத்த பிளான் என்ன?சினிமாவில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற ஆசைப்படுகிறேன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE