சுப்ரியா சுலேவுக்கு பாலியல் தொல்லை

Updated : செப் 13, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (34)
Advertisement

மும்பை : தேசியவாத காங்., கட்சி எம்.பி.,யான சுப்ரியா சுலே, டாக்சி டிரைவர் ஒருவர் ரயிலில் பாலியல் தொல்லை அளித்ததாக டுவீட் செய்ததுடன், அந்த நபர் மீது போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

சுப்ரியா சுலே, டில்லியில் இருந்து மும்பை திரும்பி போது, தாதர் ரயில் நிலையத்தில் அவர் பயணித்த பெட்டிக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். டாக்சியில் பயணிக்க போவதாக சுப்ரியா பேசியதை ஒட்டுக் கேட்ட அந்த நபர், டாக்சி வேண்டுமா என கேட்டு தொந்தரவு செய்துள்ளார். வேண்டாம் என சுப்ரியா கூறிய பிறகும் மீண்டும் மீண்டும், அவரை தொந்தரவு செய்துள்ளார்.


அத்துடன், சுப்ரியாவை அங்கிருந்து செல்ல விடாமல் பாதையை மறித்து அநாகரிகமாக நடந்து கொண்ட அந்த நபர், போஸ் கொடுத்து சுப்ரியாவுடன் போட்டோவும் எடுத்துள்ளார். சுப்ரியா எச்சரித்தும், டாக்சி தேவையில்லை என கூறியும் அந்த நபர் கேட்கவில்லை. இது தொடர்பாக சுப்ரியா, ரயில் பாதுகாப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சுப்ரியாவின் புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் குல்ஜித் சிங் மல்கோத்ரா என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Dublin,அயர்லாந்து
15-செப்-201915:18:41 IST Report Abuse
Ram இது யாருக்கும் / எல்லோருக்கும் நடக்கலாம் இதற்கு ஏன் ஒரு தலையங்கம்
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
14-செப்-201904:35:12 IST Report Abuse
B.s. Pillai It is usual for taxi drivers at Dadar station to enter into compartments and try to corner passengers. The new comers fall prey to them and these drivers usually collect a lot of money from them as fare by going round and round if they know you are new person. This happens in Chennai also. When you come out of Central station, the auto drivers surround you.Those who know there is Auto counter, go there.New people fall prey to these drivers. Mumbai city police has arranged Taxi counters where the fare for all suburbs and main roads are listed on a board and these counters are manned by Taxi Association. Anyone coming by train or by flight, can go to this counter pay the fare plus luggage charges plus service charges of 15/= and you are issued a voucher with amount paid and taxi number waiting outside in queue. Does she not know this arrangement ? You have to say that you have a car waiting outside and these drivers would move to other vulnerable passengers. no one would go on harrassing anyone.They only come for business and cheating not for sex torture. Even share taxi is available outside Bandra Terminus. The police check the voucher and ask the passenger name and check it with the name written on the voucher and ask the place you intend to travel and then only the taxi is allowed to leave the station/Airport. Once money is paid at the counter, you need not pay anything more to the taxi driver. Mumbai is the best city in the whole world.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-செப்-201917:24:22 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூபாய் 23 இலட்சம்...... காவல்துறைக்கு மட்டும் பத்து...........டாக்சி டிரைவராக நடித்த காங்கிரஸ் கம்பெனி ஆளுக்கு பத்து........பத்திரிகைகளுக்கு விருந்து செலவு மூன்று........
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
15-செப்-201904:14:52 IST Report Abuse
meenakshisundaramபெயரை பார்த்தாலே இப்போ உள்ள உண்மையான தமிழனின் மன நிலை தெரிகிறது, இவ்வளவு கீழ்த்தரமாக எவ்வாறு கருத்து(?) கூற முடிகிறது?...
Rate this:
Share this comment
nanbaenda - chennai,இந்தியா
16-செப்-201910:11:40 IST Report Abuse
nanbaendaஉலகின் மூத்த குடி தமிழன். காட்டு மிராண்டியாக ஆகி விட்டான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X