சமூக வலைதளகணக்குடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : செப் 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: சமூகவலைதள கணக்குகளுடன் ஆதார் இணைப்பு தொடர்பான திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளகணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சென்னை, மும்பை ஐகோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களை வரன்முறை படுத்துவது தொடர்பாகவும், சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக ஏதேனும் கொள்கை உள்ளதா, திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து செப்.,2 4ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-செப்-201919:17:01 IST Report Abuse
J.Isaac பெரிய ஆபத்து
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-செப்-201918:30:00 IST Report Abuse
Cheran Perumal உள்ளது என்று சொன்னால் இது தனி மனித உரிமைக்கு எதிரானது என்று சொல்வார்கள். இல்லை என்றால் ஏன் இணைக்கக்கூடாது என்று கேட்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X