பொது செய்தி

இந்தியா

47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை என விமர்சனம்

Updated : செப் 13, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிப்பதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தவறாக கூறியது தற்போது கேலிக்குள்ளானது.latest tamil newsஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் பாக்., தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்திலும், இம்ரான் கானின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியானது.

இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் வைத்த கோரிக்கைகளுக்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இவ்வாறு இம்ரான் பதிவிட்டிருந்தார்.


ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், 58 நாடுகள் ஆதரித்ததாக கூறுகிறார். அதாவது, 13 ஆப்பிரிக்க நாடுகள், 13 ஆசியா-பசிபிக் நாடுகள், 8 லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள், 7 மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள், 6 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 47 நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இது கூட தெரியாத இம்ரானுக்கு கணக்கு பாடம் தேவை என சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளானார்.


latest tamil newsஇது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பதிலளிக்கையில், 47 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரித்ததாக கூறுகிறார். அந்த நாடுகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-201917:27:58 IST Report Abuse
theruvasagan இங்கு கிடைக்கிற எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு ஆனால் பொருக்கிஸ்தானுக்கு மட்டும் விசுவாசமாய் இருக்கிற அமைதி மூர்க்கங்கள் எதுக்கு கஷ்டப்பட்டு இவ்வளவு தூரத்திலிருந்து முட்டு கொடுக்கணும். நம்ம சுடலை கான்கிட்ட சொன்னால் கூட இருக்கும் கள்ளத்தோணி எக்ஸ்பர்ட்கிட்ட சொல்லி திருப்பூர் துறைமுகத்திலிருந்து இசுலாமாபாத் துறைமுகத்துக்கு கட்டுமரம் ஏற்பாடு செய்து தருவார். இப்ப சர்வ சுபிக்ஷமும் அங்கதான் இருக்கு. அங்கேயே இருந்து உங்க ஜிங்கு சாங்கை கன்டினியூ பண்ணிக்கலாம்.
Rate this:
Cancel
14-செப்-201915:21:18 IST Report Abuse
சிவராஜ் இவனெல்லாம் ஒரு செய்தியா
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-செப்-201910:14:01 IST Report Abuse
Indhuindian ஸ்டாலின்னொட ஜப்பான் துணை முதல் மந்திரிக்கு இது தேவலே. ஏற்கனவே அவர் ரொம்ப அழுத்ததுலே இருக்கார். அவர் என்ன வேணா சொல்லலாம் யாரும் அதை பொருட்படுத்தறதுல்லே ஆனா நம்ம ஆள் அப்படி இல்லேயே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X