பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மின் இணைப்பு கட்டணம் 25ல் மக்களிடம் கருத்து கேட்பு

Added : செப் 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, வரும், 25ம் தேதி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த உள்ளது.

புதிய மின் இணைப்பு வழங்கும் போது, விண்ணப்ப படிவம், வளர்ச்சி கட்டணம், வைப்புத் தொகை போன்றவற்றை உள்ளடக்கிய, பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின், மின் பயன்பாட்டை பொறுத்து, வீடுகளுக்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறையும்; மற்ற பிரிவுகளுக்கு, மாதம்தோறும், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.அதன்படி, பல்வகை கட்டணத்தை உயர்த்தி தரும்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, ஆணையம், கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர், மின் வாரிய தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய, குழுவுடன், சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, பல்வகை கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, சென்னை, தி.நகரில் உள்ள, வாணி மஹாலில், வரும், 25ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நடத்துகிறது. அதில், மக்கள் பங்கேற்று, தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
14-செப்-201912:29:44 IST Report Abuse
R S BALA எதற்கு மக்கள் கருத்து கேட்பெல்லாம் எப்படியும் உங்கள் முடிவைத்தான் செயல்படுத்த போகிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-201907:59:38 IST Report Abuse
Bhaskaran சரியாக அறுபது நாட்களுக்கொருமுறை மின்பயன்பாட்டு கணக்கீடு எடுப்பதில்லை எத்துணை முறை சொல்லியும் டமாரசெவிடன் காதில் ஊதிய சங்குதான் இந்த மாதம் July August இரண்டுக்கும் 31 நாட்கள் ஆக அறுபது ரெண்டு நாட்கள் எத்துணை நுகர்வோர் அந்த அதிகப்படி இரண்டு நாட்களினால் ஐநூறு யூனிட்பயன்பாட்டுக்கு மேல் உயர்ந்து அதிக கட்டணம் கட்டினார்களோ மின்வாரியம் தன லாபம் ஒன்றைமட்டுமே கணக்கில் கொள்கிறது மக்கள் நலன் பூஜ்யமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X