அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர் வைக்க தடை

Updated : செப் 15, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (5+ 117)
Advertisement

சென்னை: கட்சி நிகழ்ச்சிகளுக்காக 'பேனர் கட் அவுட் பிளக்ஸ் போர்டு' வைக்க அ.தி.மு.க. - தி.மு.க. - பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகள் தடை விதித்துள்ளன.


சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ நேற்று முன்தினம் பள்ளிக்கரணையில் தன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சாலையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்ததில் கீழே விழுந்தார். வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி சுபஸ்ரீ இறந்தார். இளம்பெண் பலிக்கு காரணமான பேனர் கலாசாரத்திற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து பல கட்சி தலைவர்கள் தங்களது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதன் விபரம்:


அ.தி.மு.க. சார்பில் பன்னீர் செல்வம் - பழனிசாமி அறிக்கை:


அ.தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கோ கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும் விளம்பரம் என்ற முறையிலும் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த செயலிலும் கட்சியினர் ஈடுபடவே கூடாது. ஒரு சிலர் ஆர்வம் மிகுதியாலும் விளைவுகளை அறியாமலும் செய்கிற செயல்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட் பேனர் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும்.


தி.மு.க. தலைவர் ஸ்டாலின்:


கட்சி பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் எதிலும் பொது மக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர் கட் அவுட் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது. இது குறித்து ஏற்கனவே கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று பாதுகாப்பாக வைக்கலாம். ஆனால் சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஏற்க முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும். என் உத்தரவை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisementதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:


சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எந்த நிகழ்ச்சி என்றாலும் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்கிறது. பேனர்களை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர் வைப்போர் மீது மாநகராட்சி போலீஸ் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


த.மா.கா. தலைவர் வாசன்:


த.மா.கா.வினர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளிலும் வீதிகளிலும் பொது இடங்களிலும் விளம்பரங்கள் செய்யக் கூடாது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு கட்சியினர் செயல்பட வேண்டும். கட்சி இல்லம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் என்றால் அது தொடர்பான விளம்பரங்கள் எங்கு வைக்க அனுமதி உண்டோ அங்கு மட்டும் முறையாக அனுமதி பெற்று வைக்க வேண்டும்.


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:


பேனர் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம். பேனர்கள் தவிர்ப்போம்; நாகரிகம் காப்போம். பேனர்கள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பா.ம.க. வுக்கு மட்டும் இப்படி கூறும் உரிமை உண்டு. பா.ம.க. நிகழ்ச்சிகளில் பேனர் கட் அவுட்களுக்கு இடம் கிடையாது. துாத்துக்குடியில் என்னை வரவேற்று வைக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றிய பின் தான் விழாவில் பங்கேற்றேன்; புதுச்சேரியில் வைத்தவர்களுக்கு அபராதம் விதித்தேன். இந்த உத்தரவை மீறுவது குறித்து பா.ம.க.வினர் கனவில் கூட நினைக்கக் கூடாது.


அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன்:


அரசியல் கட்சியினர் மற்ற அமைப்பினர் தனி நபர்கள் என அனைவரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் இதற்கு சம்மந்தப் பட்ட அதிகாரிகள் உறுதியோடு இருந்து தடுக்க வேண்டும். கனரக வாகனங்களின் வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்தவும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துயரமான இந்த நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்து இனி வரும் நாட்களில் அ.ம.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Advertisement
வாசகர் கருத்து (5+ 117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-201909:05:44 IST Report Abuse
ஆப்பு கூத்தாடிகளின் ஆட்சி சினிமா போஸ்டர் ல தொடங்கி இப்போ பேனர் பதாகைகளோட ஜம்முனு நடக்குது. ஆளுங்கதான் மாறியுருக்காங்களே தவிர அதே கூத்தாடி கலாச்சாரம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
14-செப்-201908:34:09 IST Report Abuse
Darmavan சிறைத்தண்டனை/அபராதம் போன்ற தண்டனை இல்லாமல் இவர்கள் திருந்த மாட்டார்கள். கோர்ட் இவர்கள் மீது கருணை கட்ட கூடாது.சாலைவிதி மீறலுக்கு உள்ள சட்டம் இதற்கு ஏன் இல்லை/.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
14-செப்-201908:24:53 IST Report Abuse
ரத்தினம் அப்படியே கவர்மெண்டு சுவரில், பாலத்தில், சுரங்க பாதையில், தளபதி அழைக்கிறார், தலைவர் சங்க நாதம், அலை கடெலென திரண்டு வருவீர், அடங்க மறு அத்து மீறு , சுவிசேஷ கூட்டம் , பௌத்ரம், மூலம் ன்னு நாறடிச்சு, அழகை கெடுத்து எழுதுறவங்களையும் எழுத சொன்னவர்களையும், போஸ்டர் ஒட்டுறவங்களையும் ஓட்டச்சொன்னவங்களையும் உள்ள வைக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X