அமலாக்க துறையிடம் சரண்: சிதம்பரம் மனு தள்ளுபடி

Updated : செப் 15, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (11)
Advertisement
அமலாக்க துறை,சரண்,சிதம்பரம்,மனு,தள்ளுபடி

புதுடில்லி: 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு தொடர்பான, சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையிடம் சரண் அடைய தயார் என கோரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.

மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதற்கு, 2007ல், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. காங்., மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீட்டால், இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ.,யும், இதில் நடந்த சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறையும், தனித் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.


15 நாட்கள்:

இந்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சிதம்பரத்தை, கடந்த மாதம், 21ல், சி.பி.ஐ., கைது செய்தது. சி.பி.ஐ., அதிகாரிகள், ஐந்து தவணைகளில், சிதம்பரத்தை, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின், 5ம் தேதியன்று, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்; அவரை, 14 நாட்கள், நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிதம்பரம், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த, 5ம் தேதி நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையிடம் சரண் அடைய தயாராக இருப்பதாக கூறி, சிதம்பரம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து, 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க, அமலாக்கத் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி, அஜய்குமார் குகர் முன்னிலையில், நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.


அச்சம் வேண்டாம்:

அப்போது, அமலாகத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, 'சிதம்பரத்தை கைது செய்வதற்கு முன், ஆறு பேரிடம் விசாரிக்க வேண்டிஉள்ளது. 'அது முடிந்த பின், சிதம்பரத்தை, அமலாக்கத் துறை சரியான நேரத்தில் கைது செய்யும். சிதம்பரம், சிறையில் இருப்பதால், அவர், சாட்சிகளை கலைத்து விடுவார் என, அச்சப்பட வேண்டியதில்லை' என்றார்.

சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கபில் சிபல், 'சிதம்பரத்தை கைது செய்ய, அமலாகத் துறை அதிகாரிகள், கடந்த, 20, 21ம் தேதிகளில், அவரது வீட்டில் காத்திருந்தனர். 'ஆனால், இப்போது, அவர், நீதிமன்ற காவலிலேயே தொடர்ந்து இருக்க விரும்புகின்றனர். இந்த வழக்கில், எப்போது வேண்டுமானாலும் சரண் அடைய, சிதம்பரம் தயாராக இருக்கிறார்' என்றார். இருதரப்பு வாதத்துக்கு பின், சிதம்பரம் மனு மீதான தீர்ப்பை, நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், சிதம்பரத்தின் மனுவை, நேற்று தள்ளுபடி செய்த, நீதிபதி, அஜய்குமார் குகர், ''தேவைப்படும் நேரத்தில், சிதம்பரத்திடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவர்,'' என்றார். ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, 23ம் தேதிக்கு, டில்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-201923:33:01 IST Report Abuse
மதுவந்தி ஆடித் தள்ளுபடியை விட மகிழ்ச்சியான செய்தி.
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
14-செப்-201922:04:10 IST Report Abuse
Rajasekar K D விசாரணைதான் நடக்குது , வேற ஒரு மண்ணும் இல்லை. இதுக்கு ஒரு பில்டப்பு. ஒன்னும் நிரூபிக்க போறது இல்லை. ஆமா கேஸ் என்னனு போடுவீங்க
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-செப்-201919:28:02 IST Report Abuse
Nallavan Nallavan அமானுஷ்யமான சிரிப்பு ......................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X