ராகுல் பெயர் பலகை நீக்கம்; விரக்தியில் ஆதரவாளர்கள்

Updated : செப் 15, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (25)
Advertisement
ராகுல், பெயர் பலகை, நீக்கம், ஆதரவாளர்கள் , விரக்தி,சமாதானம்

சோனியா தலைமையில், நேற்று முன்தினம்(செப்.,12) நடந்த கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல் வராத நிலையில், காங்., தலைமை அலுவலகத்தில், அவரது பெயர் பலகை நீக்கப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திஉள்ளது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநில தலைவர்கள், சட்ட சபை கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் பங்கு பெற்ற, இரண்டு நாள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் டில்லியில் நடைபெற்றது. இடைக்கால தலைவர், சோனியாவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில், ராகுல் மட்டும் பங்கேற்கவில்லை. இதனால், கூட்டத்தை ராகுல் புறக்கணித்து விட்டாரா என்ற பரபரப்பு எழுந்தது.

ஆனால், 'ராகுல், கட்சியில் எந்தவொரு பதவியிலும் இல்லை என்பதால், அவரை அழைக்கவில்லை' என, மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால், 'முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கூட, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை; அவர் எப்படி அழைக்கப்பட்டார்' என்ற கேள்விக்கு, 'அவர் மட்டும் விதிவிலக்கு; பொருளாதாரம் குறித்த ஆலோசனை என்பதால், அவரை தவிர்க்க முடியாது என்பதால் அழைக்கப்பட்டார்' என, தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், கடந்த, 12 ஆண்டுகளாக, கட்சியின் தலைமையகத்தில் இருந்த ராகுலின் பெயர் பலகை நீக்கப்பட்டது தான், ராகுல் ஆதரவாளர்களால், ஜீரணிக்க முடியவில்லை; அவர்கள் விரக்தி அடைந்திருக்கின்றனர். இருப்பினும், 'ராகுல், தலைவர் பதவியிலிருந்து விலகியதில் இருந்தே, எந்தவொரு முடிவுகளிலும் அவர் தலையிடுவதில்லை. 'கட்சிக்குள், தன்னுடைய குறுக்கீடு இல்லை என்பதை நிலைநாட்டுவதில் அவர் உறுதியாக உள்ளார்; மற்றபடி, கட்சியில் அவரது சேவை, தொய்வின்றி தொடரும்' என, அவருடைய ஆதரவாளர்கள் சமாதானம் செய்து கொள்கின்றனர்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
14-செப்-201923:32:16 IST Report Abuse
mindum vasantham These days it is not pappu ji but it is puppy ji
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
14-செப்-201919:20:45 IST Report Abuse
தமிழ் மைந்தன் ராகுலுக்கு பொருளாதாரம் தெரியவில்லை எனவே அழைக்கவில்லை....... நல்லது நாடே இதைதான் சொல்கிறது....ஆனால் ராகுல் குடும்பம் மட்டும் ஏற்க மறுத்தது.....இப்போது ஏற்றுக்கொண்டது......நாட்டை வாழ்வுக்கு காங்கிரஸ் உதவுகிறது....நன்றி
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-செப்-201918:26:06 IST Report Abuse
Endrum Indian இதைத்தான் நான் மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டிருந்தேன் கருத்துப்பகுதியில்????பப்பு த கிரேட் என்ன பதவி???அவன் உளறுவானாம் அதை மீடியா அப்படியே காட்டுமாம்???ஒரே பதவி?? இப்போது காங்கிரஸ் தலைவியின் மகன், அவ்வளவே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X