சமூக வலைதளங்களுடன் ஆதார் எண் இணைப்பு?

Updated : செப் 15, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ஆதார் எண், சமூக வலைதளங்கள்,நீதிமன்றங்களில்,இணைப்பு,வழக்கு

புதுடில்லி: 'சமூக வலைதளங்களுடன், ஆதார் எண்ணை இணைப்பது பற்றி, விரைவில் முடிவெடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், 'பேஸ்புக்' சமூக வலைதள நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 'பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்குகள், சென்னை, மும்பை உட்பட, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. 'இந்த வழக்குகள் அனைத்தையும், உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்' என, கூறியிருந்தது. இந்த மனுவை. ஆகஸ்ட், 20ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கலாம்; ஆனால், உத்தரவு எதையும் பிறப்பிக்க கூடாது' என, உத்தரவிட்டது.

மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் மனு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள், 'கூகுள், டுவிட்டர், யூ -டியூப்' போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில், 'சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான கோரிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.

'எனவே, உயர் நீதிமன்றத்தில், விசாரணையில் உள்ள மனுக்களை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. 'தேவை என்றால், இது தொடர்பாக, மற்ற உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாம்' என, கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள், அனிருத்தா போஸ், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, ''உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றவதில், எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என, தெரிவித்தார்.

இதன் பின், நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில், நாங்கள் முடிவு செய்வதா அல்லது உயர் நீதிமன்றங்கள் முடிவு செய்வதா என, தெரியவில்லை. எனினும், சமூக வலைதளங்களுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக, விரைவில் முடிவெடுக்க வேண்டும். இப்போதைக்கு நாங்கள், உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என, பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கை பற்றி மட்டுமே விசாரிப்போம். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-செப்-201919:30:14 IST Report Abuse
Nallavan Nallavan இதுதான் கண்ட பலன் என்று பாஜக ஆதரவாளர்களே அலுத்துக்கொள்ளும் நிலை ......
Rate this:
Share this comment
Cancel
Ramv - Kanchipuram,இந்தியா
14-செப்-201915:10:08 IST Report Abuse
Ramv எல்லா அக்கவுண்ட்களையும் ஸ்டாப் செய்துவிட்டு மொபைல் எண் OTP மூலம் ரீ ஆக்டிவேட் செய்தாலே போதுமானது
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
14-செப்-201912:01:48 IST Report Abuse
Sampath Kumar எல்லாத்தையும் எல்லாத்துடனும் இணைத்து மக்களை நிர்வாணம் ஆக்காமல் வீடமாட்டாங்க போல ஆக இலுமினட்ஸ் கனவு நிறை வேற போகுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X