மருத்துவர் போல் நடித்து திருமணம் செய்தவருக்கு போலீசார், காப்பு!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவர் போல் நடித்து திருமணம் செய்தவருக்கு போலீசார், 'காப்பு!'

Added : செப் 14, 2019 | கருத்துகள் (2)
 மருத்துவர் போல் நடித்து திருமணம் செய்தவருக்கு போலீசார், 'காப்பு!'

மாதவரம்:மருத்துவர் என நாடகமாடி, பட்டதாரி பெண்ணை திருமணம் செய்த வாலிபர், வரவேற்பு நிகழ்ச்சியின்போது, வசமாக போலீசாரிடம் சிக்கினார்.

வில்லிவாக்கம், வெங்க டேஷ்வரா நகர், அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர், கார்த்திக், 32; தனியார் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பை, இரண்டு ஆண்டுகள் படித்தவர்.முகநுால்முகநுால் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த, 26 வயது, பி.காம்., பட்டதாரி பெண்ணிடம் பழகியுள்ளார். அவர்களுக்கு இடையேயான நட்பு, காதலாக மாறியது.

இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினரிடம், தன்னை, அரசு தோல் மருத்துவர் என, கார்த்திக் அறிமுகப்படுத்தியுள்ளார். பின், முறைப்படி பெண் கேட்டுள்ளார்.அப்போது, சினிமா பாணியில், தனக்கு தெரிந்த நபர்களை, உறவினர்கள் போல் நடிக்க வைத்து, அவர்களை நம்ப வைத்துள்ளார். இதை தொடர்ந்து, சம்மதம் தெரிவித்த பெண்ணின் பெற்றோர், திருமண ரொக்கமாக, 12 லட்சம் ரூபாயை, கார்த்திக்கிடம் கொடுத்தனர்.

தொடர்ந்து, அவர்களுக்கு சந்தேகம் வராதவாறு நாடகத்தை அரங்கேற்றி, 11ம் தேதி, கொளத்துாரில் உள்ள, அம்மன் கோவிலில், அந்த இளம்பெண்ணை திருமணமும் செய்து கொண்டார்.தொடர் விசாரணைநேற்று முன்தினம் இரவு, மாதவரம், ரெட்டேரி சந்திப்பில் உள்ள, தனியார் திருமண மண்ட பத்தில், வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.அப்போது, சாப்பாட்டு செலவிற்காக, கார்த்திக், பெண் வீட்டாரிடம், 75 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றி, திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், கார்த்திக்கிடம் விசாரித்தனர். அப்போது அவர், போலி மருத்துவர் என்பதும், அரசு மருத்துவர்என குறிப்பிடும் வகையில், வாகனத்தில், 'ஜி' என, ஆங்கில எழுத்தில் அடையாளமிட்டு வலம் வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து, கார்த்திக்கையும், நண்பர்கள் ஐந்து பேரையும் பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X