மாமனார் வீட்டிலிருந்து கதறியபடி வெளியேறினார் லாலு மருமகள்

Added : செப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பாட்னா : விவாகரத்து கோரி கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மருமகள் நேற்று கதறியழுதபடி மாமனார் வீட்டிலிருந்து வெளியேறினார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் 30. இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாட்னாவில் மிக ஆடம்பரமாக திருமணம் நடந்தது பீஹாரின் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் பேத்தியும் ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ. சந்திரிகா ராயின் மகளுமான ஐஸ்வர்யாவை தேஜ் பிரதாப் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஆறு மாதத்திலேயே தேஜ் பிரதாப்புக்கு திருமண வாழ்க்கை கசந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் தேஜ் பிரதாப் வழக்கு தொடர்ந்தார். எனினும் அவரின் விவாகரத்து முடிவுக்கு லாலு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கால்நடை தீவண ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ரப்ரி உட்பட பலரும் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சித்தனர்.

இதனால் ஐஸ்வர்யா லாலு பிரசாத் வீட்டிலேயே தங்கியிருந்தார்.சமீபத்தில் தந்தை வீட்டுக்கு சென்றிருந்த ஐஸ்வர்யா நேற்று மாலை மாமனார் வீட்டுக்கு வந்தார். ஒரு மணி நேரம் கழித்து வீட்டிலிருந்து கண்ணீர் மல்க வேகமாக வெளியே வந்தார். கையில் சில 'சூட்கேஸ்'களை துாக்கி வந்த ஐஸ்வர்யா காரில் ஏறி தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இது பற்றி விசாரித்த போது 'இது குடும்ப பிரச்னை' என ராஷ்ட்ரீய ஜனதாதள வட்டாரங்கள் தெரிவித்தன. இது பற்றி லாலு குடும்பத்தினர் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-செப்-201914:55:50 IST Report Abuse
Nallavan Nallavan நல்ல குடும்பத்துப் பொண்ணு போலிருக்கு .............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X