பொது செய்தி

இந்தியா

'லேண்டர்' தொடர்பை மீட்க முடியுமா? வாய்ப்பு குறைவதாக விஞ்ஞானிகள் தகவல்

Updated : செப் 15, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (11)
Advertisement
லேண்டர், சந்திரயான் - 2 , இஸ்ரோ ,தொடர்பை, மீட்க ,ஆய்வு

பெங்களூரு: நிலவில் விழுந்து கிடக்கும் 'லேண்டர்' சாதனத்துடனான தொடர்பை மீட்பதற்கு மிக குறைவான வாய்ப்புகளே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் - 2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் ஏவினர். விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து லேண்டர் (விக்ரம்) வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து நிலவில் பத்திரமாக தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் நிலவில் தரையிறங்க 2.1 கி.மீ. துாரம் இருக்கும்போது லேண்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு 'சிக்னல்' கிடைக்கவில்லை. கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் தொடர்பை மீட்க முடியவில்லை. நிலவை சுற்றும் சாதனமான 'ஆர்பிட்டர்', லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இஸ்ரோ வட்டாரங்கள் கூறியதாவது: ஒவ்வொரு மணி நேரம் கடக்கும் போதும் லேண்டர் சாதனத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்து வருகிறது. நிலவில் லேண்டர் சாதனத்தின் செயல்பாடு 14 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த 14 நாட்களுக்கு மட்டுமே அதற்கு சூரிய ஒளி கிடைக்கும். இதன் மூலம் லேண்டரில் உள்ள சோலார் தகடு மூலம் அதில் உள்ள பேட்டரியை உயிர் பெறச் செய்ய முடியும்.

ஆனால் 14 நாட்களுக்கு பின் லேண்டரில் சூரிய ஒளி படாது. அதற்கு பின் லேண்டரில் உள்ள பேட்டரியை இயங்கச் செய்வது சாத்தியமல்ல. தற்போது லேண்டரில் இருந்து 'சிக்னல்' துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் முடிந்து விட்டது. அதன் ஆயுள் காலம் இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. மேலும் லேண்டர் சாதனம் நிலவில் விழுந்தபோது ஏற்பட்ட அதிர்வுகளால் அதில் சேதம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - tirunelveli,இந்தியா
14-செப்-201922:37:08 IST Report Abuse
sams Mr pugaz like that for u who doung nothing and brushing the govt office chaur lakhs of crore taxpayers money was wasted compare to 0.001% of taxpayer money where lsp for this project where as 40 to 60 %tax payer money easted ineffucient corrupt administrative govt employees
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201922:20:45 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar சந்திரயான் 1 ப்ராஜெக்ட் நடந்தபோது நானும் அங்கு இருந்தேன் (அலாரம் பொருத்தும் பணியில்) முதன் முதலாக சந்திரனின் தோற்றத்தை பார்த்த போது என்னையே மறந்தேன் அதில் வேலை செய்த்தவர்கள் உணவை மறந்து கடமையை மட்டும் ஆற்றும் வெறியில் இருந்தனர் வெற்றி பெற்றனர், இன்று இஸ்ரோவுக்கு வரும் வரும் வருமானம் மற்ற நிறுவனத்தை ( நாசா, ஐரோப்பியன் space agency ) விட அதிகம் என்னுடன் வேலை செய்யும் அமெரிக்காரும், பிரிட்டிஸ்காரர்களும் இந்திய பற்றி பேசும்போது பெருமையாக உள்ளது ஆனால் கொள்ளை அடித்த திராவிட கட்சிகளுக்கு கொடி பிடிக்கும் கோமாளிகளை நினைத்தால்.....
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201922:11:04 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar நாகரிகமா பேச தெரியாத ஜென்மங்களை என்ன சொல்வது, இவர்கள் எல்லாரும் அமெரிக்கா செய்தான் சீனா செய்தான் என பேசி பொழு போக்கும் ஆனால் நம்ம அறிவியல் அறிஞர்கள் செய்தால் வெட்டி செலவு என சொல்லுங்க, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஆசியா விளையாட்டு போட்டியில், ஒரு டாய்லட் பேப்பர் ரோல் 1000 ரூபாய் என கணக்கு காட்டியபோது என்ன செய்தார்கள் , இந்த மாதிரி மத வெறி கும்பலுக்கு நாடு மற்றும் நாட்டு பற்று என்பது எதுவும் கிடையாது வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X