கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பேனர் விவகாரம்: முதல்வருக்கு ஐகோர்ட் 'சுளீர்!'

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (52)
Share
Advertisement
சென்னை : விதிகளை மீறி சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கடும் கோபத்தை காட்டியது. 'விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்படும் விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது ஏன்; உயிர் பலி நிகழ்ந்தால் தான் நடவடிக்கை எடுப்பரா' என சுளீர் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 'பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முதல்வர் பழனிசாமி தடை விதித்தது போல

சென்னை : விதிகளை மீறி சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கடும் கோபத்தை காட்டியது. 'விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்படும் விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது ஏன்; உயிர் பலி நிகழ்ந்தால் தான் நடவடிக்கை எடுப்பரா' என சுளீர் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 'பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முதல்வர் பழனிசாமி தடை விதித்தது போல பேனருக்கும் தடை விதித்திருக்க முடியும்' என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும் அந்த தொகையை அலட்சியம் காட்டிய அதிகாரிகளிடமிருந்து வசூலிக்கவும் சாட்டையடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.latest tamil news
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ; துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பள்ளிக்கரணையில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ மேல் சரிந்தது. நிலை தடுமாறிய சுபஸ்ரீ வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில் சுபஸ்ரீ படுகாயம் அடைந்தார். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மரணம் அடைந்தார்.

சம்பவம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவும் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரியும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் வழக்கறிஞர்கள் லட்சுமிநாராயணன், கண்ணதாசன் முறை யிட்டனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு அரசியல் கட்சிகள் பதில் அளிக்கவில்லை. பேனர்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் தெரியவில்லை. இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்; மனித உயிர்களுக்கு இது தான் மரியாதையா?

அதிகாரிகள் ரத்தத்தை உறிஞ்சுபவர்களாக மாறி விட்டனர். அவர்கள் மெத்தனமாக செயல்படுகின்றனர். அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஒரே நாளில் இத்தனை பேனர்களும் வந்து விடாது. பேனர்கள் இல்லாமல் விழாக்கள் நிகழ்ச்சிகள் நடத்த முடியாதா; பேனர்கள் வைத்தால் தான் சிறப்பு விருந்தினர்கள் வருவரா; அப்போது தான் அவர்களுக்கு வழி தெரியுமா; எவ்வளவு இழப்பீடு வழங்கினாலும் பலியானவரை உயிரோடு கொண்டு வர முடியுமா?


latest tamil news

நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை காமராஜர் சாலையில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்.
பேனர்கள் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முதல்வர் தடை விதித்தது போல பேனருக்கும் தடை விதிக்க முடியும். இப்போது கூட கடற்கரை சாலையில் ஆளும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருக்கின்றன; அதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பள்ளிக்கரணை சம்பவம் குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகினர். வழக்கறிஞர் கண்ணதாசன் ஆஜராகி பேனர்கள் வைப்பது தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறி அதன் நகலை தாக்கல் செய்தார். அரசு தரப்பில் பள்ளிக்கரணை சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஏதாவது சம்பவம் நடந்தால் உடனே வருத்தம் தெரிவிக்கின்றனர். பேனர்கள் வைக்கக் கூடாது என்பதை அரசியல் கட்சிகள் ஏன் உத்தரவாதமாக அளிக்கக் கூடாது? இப்போது அறிக்கை வெளியிடும் கட்சிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்காது. பத்திரிகைகளில் அறிக்கை வெளியிடுவதற்கு பதில் அரசியல் கட்சிகள் உத்தரவாத மனுவாக ஏன் தாக்கல் செய்யக் கூடாது?


latest tamil newsகல்யாணம், காது குத்து, பிறந்த நாள், துக்க நிகழ்வு என எல்லா நிகழ்ச்சிக்கும் பேனர்கள் வைப்பது வழக்கமாகி விட்டது. விவாகரத்துக்கு தான் பேனர் வைக்கவில்லை. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டம், விதிமுறைகளை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். உயிர் பலி ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பரா; சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளையும் அனுமதிக்க வேண்டும்.

அட்வகேட் ஜெனரல்: அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும். மாநகராட்சியில் போதிய ஊழியர்கள் இல்லை. போக்குவரத்து போலீசார் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிபதிகள்: கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதே; அனுமதியின்றி பேனர் வைப்பது தெரிந்த உடன் அதை உடனடியாக அகற்றலாமே.

அட்வகேட் ஜெனரல்: பிரதான சாலைகளில் தான் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தெருக்களில் குடியிருப்போர் சங்கங்கள் சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வழக்கறிஞர் லட்சுமி நாராயணன்: சம்பவ இடத்தில் இரண்டு மணி நேரமாக உடல் கிடந்ததாகவும் அதற்கிடையில் அங்கு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது.

நீதிபதிகள்: புகார் கொடுக்கும்படி பலியான பெண்ணின் தந்தையிடம் போலீஸ் தரப்பில் ஏன் கேட்கப்பட்டது; வரைபடம் பார்வை மகஜரில் பேனர் பற்றி எதுவும் கூறப்படாதது ஏன்; அந்த இடத்தில் எத்தனை பேனர்கள் இருந்தன?

போலீஸ் அதிகாரி: நான்கு பேனர்கள் இருந்தன.

நீதிபதிகள்: அதை ஏன் குறிப்பிடவில்லை; எழுத மறந்து விட்டீர்களா; 'டிஜிட்டல்' பேனர் வைப்பதற்கு முன் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் அல்லவா. விதிமுறைகளை கடைபிடிக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சி துறை முதன்மை செயலர் மனு தாக்கல் செய்துள்ளார். எங்கே நடவடிக்கை எடுக்கப்பட்டது; உத்தரவை பின்பற்றக் கூடாது என்ற பழக்கத்தை அதிகாரிகள் கொண்டுள்ளனர். தவறு செய்யும் அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.


நீதிபதிகள் உத்தரவு:


பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக அரசு வழங்க வேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். சம்பவத்துக்கு பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளின் புலன் விசாரணையை சென்னை மாநகர போலீஸ் ஆணையர் கண்காணிக்க வேண்டும். புலன்விசாரணை குறித்த அறிக்கையை பள்ளிக்கரணை மற்றும் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை செப்., 25ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-செப்-201917:03:58 IST Report Abuse
skv srinivasankrishnaveni பேனர் வச்சானே அவனையே தூக்குல போடணும் முடியுமா ////////?????????????????????????நடக்குமா இந்த ஆட்ச்சில் . பார்த்துண்டே இருங்க அந்தப்பொண்ணுதான் காரணம் என்று திசை திருப்புவானுகோ
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
17-செப்-201912:06:44 IST Report Abuse
narayanan iyer பாதிக்கப்பட்ட பெண் பிராமின். இதே வேறு இனத்தவராக இருந்தால் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் போட்டி போட்டுகொண்டு ஓடோடி போய் இருப்பார்கள்தானே? எவனும் வாய திறக்கவில்லையே .ஆளும் கட்சி முதல்வர் ஓடியிருக்க வேண்டாமா? போங்கடா நீங்களும் உங்க கட்சியும் .
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
16-செப்-201917:01:08 IST Report Abuse
Varun Ramesh பேனர் வைத்தவரின் ரேஷன், பான், ஆதார் கார்டுகளையும் வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், எரிவாயு இணைப்பு, குடிநீர்-மின் இணைப்புகள் வங்கி கணக்குகளையும் முடக்க முடியாதா, காவல் துறையினரால் தேடப்பட்டு தலைமறைவாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X