பொது செய்தி

தமிழ்நாடு

குளம் தூர்வார வலியுறுத்தல்: மத்திய அமைச்சரிடம் மனு

Added : செப் 14, 2019
Advertisement

திருப்பூர்:காங்கயத்தில் உள்ள பழமையான குளத்தை துார் வார வேண்டும் என, மத்திய அமைச்சரிடம் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
காங்கயம் வேர்கள் அமைப்பு நிர்வாகிகள் டில்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ெஷகாவத்தை சந்தித்துஅளித்த மனு விவரம்: தமிழகத்தில் உள்ள கோவில் குளங்கள் பாரம்பரிய முறைப்படி துார் வாரி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.காங்கயம் நகராட்சியில் உள்ள பதுமன் குளம் 50 ஆண்டாக துார் வாராமல் உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்புள்ள இதன் ஆழம் 110 அடி வரை உள்ளது. இக்குளத்தில் நீர் நிரம்பினால் சுற்றுப்பகுதியில் விவசாய கிணறுகள், ஆழ் குழாய்கள் நீராதாரம் பெறும்.தற்போது, நகரின் சாக்கடை கழிவால் குளம் பாழ்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டாக இதை துார் வார கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.இதை துார் வாரி நீர் நிரம்ப நடவடிக்கை எடுத்தால், சுற்றுப்பகுதியில் குடிநீர் பிரச்னை தீரும். ஜல்சக்தி அபியான் திட்டத்தில் இதை துார் வாரி, பொதுமக்கள் பயன்பாடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X