பொது செய்தி

தமிழ்நாடு

'தொழில் நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி'

Added : செப் 14, 2019
Advertisement

கோவை:கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மற்றும் அமெரிக்காவின் கிளைட்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி சார்பில், சர்வதேச கருத்தரங்கு நடந்தது.அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடந்த இக்கருத்தரங்கை துவக்கி வைத்து, கிளைட்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி மேலாண்மை கல்லுாரி டீன் ஜேக்கப் சாக்கோ பேசியதாவது:கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை எடுத்துக்கூற வேண்டும்; தொழில் நிறுவனங்களில் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கல்லுாரி சார்பில், 12 ஆய்வு கட்டுரைகள் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றை கிருஷ்ணா கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், கல்லுாரி முதல்வர் பேபி ஷகிலா, கல்லுாரி துணை முதல்வர் விஜயசாமுண்டேஸ்வரி, பேராசிரியர்கள் சரஸ்வதி, ெஹன்றிகிேஷார் உள்ளிட்ட மாணவர்கள் சமர்ப்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X